இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
263
சொல்லும் ஓசையினால் ஒத்திருப்பதனால், யவனிகா என்பது கிரேக்க மொழிச் சொல் என்று மயங்குவதற்கு இடமாயிருப்பது போலவே, ஓரை என்னும் தமிழ்ச் சொல்லும் ஹோரா என்னும் கிரேக்க மொழிச் சொல்லுடன் ஓசையால் ஒத்திருப்பது கொண்டு அதனைச் சிலர் கிரேக்க மொழிச் சொல் என்று கருதுகிறார்கள். இதுபற்றி இப்போது ஆராய்ந்தால் இடம் பெருகும் என்னும் அச்சத்தினால் ஆராயாது விடுகிறோம்.
கடைச் சங்க காலத்தின் பிற்பகுதியிலே, ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகளாக யவனர்கள் தமிழ்நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும், அவ்வாணிகத்தைக் கடல் வழியாகச் செய்தனர் என்பதும் இக்கட்டுரையினால் ஒருவாறு விளக்கப்பட்டன.
✽✽✽