46
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
முதுகுடுமிப் பெருவழுதியை வாழ்த்திய நெட்டிமையார் அவனை இவ்வாறு வாழ்த்துகிறார்.
'எங்கோ வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.'(புறம். 9:8-11)
பழமையாக நடந்துவந்த வருண வழிபாடு கி.மு. முதல் நூற்றாண்டிலேயே மறைந்துவிட்டது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தி காலத்தில் பௌத்த மதம் தமிழகத்துக்கு வந்தது. அந்த மதம் கி.மு. இரண்டாம் முதலாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பரவிச் செல்வாக்குப் பெற்றது. அப்போது அம் மதத்தின் சிறு தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் வருணனுக்குப் பதிலாக வணங்கப்பட்டது. கடல் தெய்வமாகிய மணிமேகலா தெய்வம் கடலில் பிரயாணம் செய்கிற நல்லவருக்குக் கடலில் துன்பம் நேரிட்டால் அது அவர்களுக்கு உதவி செய்து காப்பாற்றுகிறது என்னும் நம்பிக்கை பௌத்த மதத்தில் இருந்தது. பௌத்தம் தமிழகத்தில் பரவிய போது, தமிழ்நாட்டு வணிகர் மணிமேகலா தெய்வத்தையும் கடல்தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட்டார்கள். இதைச் சிலப்பதிகாரம் மணிமேகலை என்னுங் காவியங்களிலிருந்து அறிகிறோம். நாவாயில் கடல் வாணிகம் செய்தவர் நாவிகர் என்று பெயர்பெற்றனர். கடல் வாணிகம் செய்த பெரிய நாவிகர் மாநாவிகர் என்று பெயர் பெற்றனர். மாநாவிகர் என்னும் பெயர் மருவி மாநாய்கர் என்று வழங்கப்பட்டது. (நாவாய் - மரக்கலம்). நாவாய்களில் வாணிகம் செய்தவன் நாவிகன் - நாவிகன் என்பது நாய்கன் என்று மருவிற்று. சிலப்பதிகாரக் காவியத் தலைவியாகிய கண்ணகி காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த ஒரு மாநாய்கனுடைய மகன். கி.பி. இரண்டாம் ய நூற்றாண்டிலிருந்த அந்த மாநாய்கனையும் அவன் மகளான கண்ணகியையும் சிலப்பதிகாரம் இவ்வாறு கூறுகிறது.
'நாகநீள் நகரொடு நாக நாடதனொடு
போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்'(சிலம்பு. மங்கல வாழ்த்து)