பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
49
எழுத்துக்கள் வெளிப்பட்டன. கற்பாறையோடு சார்ந்திருந்த அந்த மாளிகையில் அக்காலத்தில் தமிழக நாவாய்த் தலைவன் அமர்ந்திருந்த இடத்திலும் மற்ற வாணிகத் தலைவர்கள் அமர்ந்திருந்த இடங்களிலும், அவர்களுடைய பெயர்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலே தமிழ் வாணிகர் அநுராதபுரத்தில் பெரிய வாணிக நிலையம் அமைத்திருந்தது தெரிகிறது.2
கி.மு. இரண்டு, ஒன்றாம் நூற்றாண்டுகளில் இலங்கையில் வேறு சில தமிழ் வாணிகர் இருந்ததை அக்காலத்துப் பிராமிய எழுத்துச் சாசனங்கள் கூறுகின்றன.3
தமிழ்நாட்டு வாணிகர் இலங்கைக்குச் சென்று வாணிகஞ் செய்ததைச் சங்க இலக்கியங்கள் கூறவில்லை. தமிழ் வாணிகர் இருவர் இலங்கையைக் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் அரசாண்டதை இலங்கை நூல்கள் கூறுகின்றன. சேனன், குட்டகன் என்னும் இரண்டு தமிழ் வணிகர் அக்காலத்தில் இலங்கையை அரசாண்ட சூரத்திஸ்ஸன் என்னும் சிங்கள அரசனை வென்று புத்த சகாப்தம் 306 முதல் 328 வரையில் (கி.மு. 177 முதல் 155 வரையில்) இருபத்திரண்டு ஆண்டு நீதியாக அரசாண்டார்கள் என்று மகாவம்சமும் (xxi:10-11) தீபவம்சமும் (XVIII: 47F) கூறுகின்றன. இவ்விருவரும் அஸ்ஸநாவிகர் (அஸ்ஸம் அஸ்வம் = குதிரை) குதிரை வணிகர் என்று கூறப்பட்டுள்ளனர்.
நடுக்கடல் வாணிகம்
தமிழகத்துக்குக் கிழக்கே வெகு தூரத்தில் வங்காளக்குடாக் கடலுக்கு அப்பால் பசிபிக் மகா சமுத்திரத்தில் பெருந்தீவுகளின் கூட்டம் இருக்கிறது. அந்தத் தீவுகளுக்கு இக்காலத்தில் கிழக் கிந்தியத் தீவுகள் என்றும் இந்தோனேஷியத் தீவுகள் என்றும் பெயர். சங்க காலத்திலே இந்தத் தீவுகளைத் தமிழர், சாவகம் என்றும் சாவக நாடு என்றும் கூறினார்கள். சாவக நாட்டோடு அக்காலத் தமிழர் கடல் வழியாக வாணிகஞ் செய்தனர். தமிழ்நாட்டிலிருந்து ஆயிரம் மைல்களுக்கப்பால் உள்ள சாவகத் தீவுகளுக்கு வங்காளக்குடாக் கடலைக் கடந்து நடுக்கடலிலே கப்பலோட்டிச் சென்றார்கள்.
சாவக நாடு (கிழக்கிந்தியத் தீவுகள்) என்பது பெரிதும் சிறிதுமான ஆயிரக்கணக்கான தீவுகளின் கூட்டமாகும். இத்தீவுகளில் முக்கியமானது சாவா தீவு (ஜாவா). இதை வடநாட்டார் யவதீபம் என்று கூறினார்கள். சீன நாட்டார் இதை யெ தீயவோ (Ye Tiao) என்று பெயர்