56
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-4
'பவர்மொசிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்
வென்றெறி முழங்குபணை செய்தவெல் போர்
நாரரி நறவின் ஆரமார்பின்
போரடு தானைச் சேரலாத.'(2ஆம் பத்து 1: 12-16)
இதில் இவன் கடம்பரை நேரில் சென்று அடக்காமல் தன் மகனை ஏவினான் என்பது கூறப்படுகிறது. ஏவப்பட்டவன் இவனுடைய மகனான செங்குட்டுவன்,
'இருமுந்நீர்த் துருத்தியுள்
முரணியோர்த் தலைச் சென்று
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின்
நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி.'(2ஆம் பத்து 10:2-5)
செங்குட்டுவன் கடல் துருத்திக் குறும்பரை வென்றபடியால் அவன் ‘கடல் பிறகோட்டிய செங்குட்டுவன்’ என்று பெயர் பெற்றான். இவனைப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தைப் பாடிய பரணர்.
'தானை மன்னர்
இனியா ருளரோ நின் முன்னு மில்லை.
மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது
விலங்குவரி கடவும் துளங்கிருங் கமஞ்சூல்
வயங்குமணி இமைப்பின் வேலிடுபு
முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே'(5ஆம் பத்து 5:17-22)
என்று கூறுகிறார்.
தன் தந்தையின் ஏவலின்படி செங்குட்டுவன் கடற் குறும்பரை வென்று அடக்கினான் என்பது இவற்றிலிருந்து தெரிகிறது.
குறிப்பு : கடல் தீவில் கடம்ப மரத்தைக் காவல் மரமாகக் கொண்டிருந்த குறும்பரும் பிற்காலத்தில் சரித்திரப் புகழ் பெற்ற வனவாசிக் கதம்பரும் ஒருவரே என்று சிலர் கருதுவர். அப்படிக் கருதுவது தவறு. கடல் தீவில் இருந்த கொள்ளைக் குறும்பர் கடம்ப மரத்தை வளர்த்ததும், வனவாசிக் கடம்பர் கடம்ப மரத்தை வளர்த்ததும் காரணமாக இருவரும் ஒருவரே என்று