பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




பண்டைத் தமிழகம்
வணிகம் - நகரங்கள் - பண்பாடு


சங்க நூற்பிரதிகளில் காணப்படும் பல்வேறு தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, பண்டைத் தமிழ்ச் சமூகத்தின் வணிக முறைமைகளை மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் விரிவாக ஆய்வு செய்துள்ளார். பாடலிபுரம், சாவகம், மலேயா, பர்மா, இலங்கை, அரபு நாடுகள், எகிப்து, உரோம் ஆகிய பிற பகுதிகளுடன் தமிழர்கள் கொண்டிருந்த வணிக உறவை இந்நூல் மூலம் அறியமுடிகிறது. ‘சாத்து’ எனப்படும் வணிகக்குழுக்கள் மேற்குறித்தப் பகுதிகளுக்குச் சென்று வணிகம்செய்தனர். பேரா. நொபுரு கரோஷிமா தலைமையில், தொல்பொருள் துறைசேர்ந்தஅறிஞர்கள் பலர், தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகச் சாத்துகள் தொடர்பான பல்வேறு கல்வெட்டுக்களை அண்மையில் கண்டறிந்துள்ளனர். வணிகம் செய்தவர்கள் யார்? அவர்களுக்கு சமூகத்தில் கொடுக்கப்பட்ட மரியாதை எவ்வகையில் அமைந்திருந்தது? ஆகியவை குறித்த பல்வேறு விவரங்களையும் அறியமுடிகிறது.

திணைசார்ந்த வாழ்க்கைமுறை பண்டைத் தமிழ்ச்சமூகத்தில் நடைமுறையில் இருந்ததை அறிகிறோம். இவர்களிடத்தில் பண்டமாற்று முறையே பெரிதும் நடைமுறையில் இருந்ததைக் காணமுடிகிறது. இம்முறைமை நடைமுறையில் இருந்தபோதே காசுகளும் புழக்கத்தில் இருந்ததை மயிலை சீனி. குறிப்பிடுகிறார். இதன் மூலம் ஒரே சமயத்தில் இரண்டுமே நடைமுறையில் இருந்ததை அறிகிறோம். அண்மைக்