பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 4.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு

71


6. பழங்காலத் துறைமுகப் பட்டினங்கள்

கடல் வழியாகக் கப்பல்களில் வாணிகம் நடைபெற்றது. தரை வாணிகத்தைவிடக் கடல் வழி வாணிகம் அதிகமாக நடந்தது. தரை வாணிகத்தைவிடக் கடல் வாணிகம் அதிகச் செலவில்லாமலும் விரைவாகவும் இருந்தபடியால் கப்பல் வாணிகம் சிறப்பாக நடந்தது. கடல் வாணிகத்துக்குக் கப்பல்கள் தேவை. கப்பல் கட்டும் தொழில்கள் ஒவ்வொரு நாட்டிலும் நடந்தன. கப்பல்களைக் கடலில் ஓட்டிக் கொண்டுபோய்ப் பொருள்களை இறக்குமதி ஏற்றுமதி செய்வதற்கு அந்தந்த நாடுகளில் துறைமுகங்கள் தேவை. ஆகவே, ஒவ்வொரு நாட்டிலும் துறைமுகப் பட்டினங்கள் ஏற்பட்டிருந்தன. பெரும்பாலும் துறைமுகப் பட்டினங்கள், ஆறுகள் கடலில் சேர்கின்ற புகர் முகங்களில் இருந்தன; ஆற்று முகத்துவாரங்கள் இல்லாத துறைமுகப் பட்டினங் களும் சில இருந்தன. ஒவ்வொரு பெரிய துறைமுகங்களிலும் கலங்கரை விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. துறைமுகங்களில் ஏற்றுமதி இறக்குமதியாகும் பொருள்களுக்குச் சுங்கம் வாங்கப்பட்டது. அந்தச் சுங்கப்பணம் அந்தந்த நாட்டை யாளும் அரசர்களுக்குரியது.

ரு

வட இந்தியாவில் கங்கையாறு முக்கியமான பெரிய ஆறு. அது கடலில் சேர்கிற இடத்தில் கப்பல்கள் உள்நாட்டில் நுழைந்து காசி (வாரணாசி), பாடலிபுரம் முதலான துறைமுகங்களுக்குப் போயின. அக்காலத்திலே பாரத தேசத்திலே இருந்த துறைமுகப் பட்டினங் களைக் கூறுவோம். பாரத நாட்டின் கிழக்குக் கரையில் (தமிழ்நாட்டுக்கு வடக்கே) இருந்த பேர்போன துறைமுகங்கள் தமிலிப்தியும் கலிங்கப் பட்டினமும் ஆகும். தமிலிப்தி என்பது அக்காலத்தில் உலகப் புகழ் பெற்ற பெரிய துறைமுகம். அது கங்கையாறு கடலில் கலக்கிற இடத்தில் வங்காள தேசத்தில் இருந்தது. அதற்குத் தெற்கே கலிங்க தேசத்தில் கலிங்கப்பட் டினத்தில் ஒரு துறைமுகப்பட்டினம் இருந்தது. இந்தத் துறைமுகப் பட்டினங்களுக்கு இடையே வேறு சில துறைமுகப் பட்டினங்களும் அக்காலத்தில் இருந்திருக்கக்கூடும். அவற்றைப் பற்றி இப்போது நமக்குத் தெரியவில்லை.

அக்காலத்துத் தமிழகத்தின் துறைமுகப்பட்டினங்களைக் கூறுவோம்.