பண்டைத் தமிழகம் - வணிகம், நகரங்கள் மற்றும் பண்பாடு
7
உறையூர் எப்படி மறைந்துபோயிற்று என்பது குறித்தும் எழுதியிருக்கிறார். சிறுபாணாற்றுப்படையை அடிப்படையாகக்கொண்டு, “சிறுபாணன் சென்றபெருவழி” எனும் கட்டுரை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. இன்றைய நிலவியற்போக்கில் அவ்வழியை மயிலை சீனி. கண்டறிந்துள்ளார். கிழக்குக்கடற்கரைப் பகுதியிலிருந்து திண்டிவனம் வழியாக வேலூர் வரை செல்வதாக அவ்வழி அமைந்துள்ளது. சங்கப் பாடல்களில் காணப்படும் செய்திகள் எவ்வகையில் நேரடியான வரலாறாக அமைகிறது என்பதற்கு இக்கட்டுரை அரிய சான்றாக உள்ளது.
பண்டைத் தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு நடைமுறைச் செயல்பாடுகள் குறித்து அறிவதற்கு இத்தொகுதி பெரிதும் உதவும். பண்டைத்தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றை அறிவதற்கான அடிப்படைத் தரவாகவும் இந்நூல் அமைகிறது.
இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.
ஏப்ரல் 2010
சென்னை - 96
வீ. அரசு
தமிழ்ப்பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை
சென்னைப் பல்கலைக்கழகம்