பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

-

இதன் பொருள் வணக்கத்துக்குரிய ஆசிரியர்' என்பது. எரி என்பது தீ (அக்கினி). அஃதாவது சூரியனைக் குறிக்கிறது. அரிதன் என்பது ஹாரித என்பதாகும். ஹாரித குலத்தைச் சேர்ந்தவன் என்பது இதன் பொருள்.

முதல் வாக்கியத்தின் பொருள். 'இவ குன்றத்தில் வசிக்கிற வணக்கத்துக்குரிய (பத்தந்த)

ஏரி ஆரிதன் ‘என்பது இரண்டாவது வரியில்' அதன் என்பது ஆதன் என்னும் சொல்லின் திரிபு. ஆதன் என்பது அதன் என்று எழுதப்பட்டுள்ளது. தூவி, தூவல் என்னுஞ் சொற்கள் பறவைகளின் சிறகைக் குறிக்கும் சொற்கள். இவை மயில் இறகையும் குறிக்கிறது. தூவயி (தூவை அல்லது தூவையர்) என்பது மயில் இறகைக் கையில் வைத்திருப்பவர் என்னும் பொருள் உள்ளது. திகம்பர சைனர் மயில் இறகுக் கொத்தைக் கையில் வைத்திருப்பது வழக்கம். ஆசீவர்களும் இறகை வைத்திருக்கக் கூடும். அரிட்ட கோயிபன் என்பது ஓர் ஆளின் பெயர். கோயிபன் என்பது காஸ்யபன் என்பதன் திரிபு. இந்த வாக்கியத்தின் பொருள் ‘மயில் இறகுக் கத்தையை வைத்திருக்கிற ஆதனாகிய’ அரிட்ட கோயிபன்' என்பது.6

இந்த வாக்கியத்தை நாம் படித்து நேரான செம்பொருள் காண்போம்.

வகுனறதூ உறையுள் உதனஏரிஅரிதன

அத தூ வாயி அரிட்டகொயிபன

புள்ளி இட்டுப் பதம் பிரித்தால் இவ்வாறு வாக்கியம் அமைகிறது:

இவ் குன்ற தூ உறையுள் உதன் ஏரி அரிதன்

அத் தூ வாயி அரிட்ட கோ யிபன்

இந்த வாக்கியத்தின் பொருள் இது:

குன்றிலுள்ள உறையுளையும் (குகையையும்) அதன் அருகில் உள்ள ஏரியையும் அரிதன் அந்துவாயி, அரிட்டகோயிபன் (என்னும் இருவர் தானமாக முனிவர்களுக்குக் கொடுத்தார்கள்).