பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

147

இளைய மகள் என்று படித்திருப்பதும் தவறாகும். தமிழில் குறுமகள் என்பதற்கும் குறுமகன் என்பதற்கும் பொருள் வேறுபாடு உண்டு. குறுமகள் என்றால் இளம்பெண் என்று பொருள். குறுமகன் என்பது குறுமகளின் ஆண்பாற் பெயர் அன்று. குறுமகன் என்றால் கீழ்மகன் என்று பொருள்.19 பிராமி எழுத்தில் கூறப்படுகிற 'பிடன் குறுமகள்' என்பதைப் ‘பிடன் குறுமகன்' என்று படித்தால் பிட்டனுடைய கீழ்மகன் என்று பொருளாகிறது. கல்வெட்டில் 'குறுமகள்' என்னும் சொல் தெளிவாகக் காணப்படுகிறது.

6

குறுமகள்' என்றால் இளம் பெண். சிறு வயதுள்ள மகள் என்பது பொருள். சங்கச் செய்யுள்களில் குறுமகள் என்னுஞ் சொல்லை நெடுகக் காண்கிறோம்.20

இரண்டாவது வரியில் கீரன் கொற்றி என்று தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. இதைக் கீரன் ஓரி என்று மகாதேவன் படிப்பது தவறு. கீரன் கொற்றி என்பதே சரியானது. கொற்றன் என்று ஆண்மகனுக்கும் கொற்றி என்று பெண்மகளுக்கும் சங்க காலத்தில் பெயர்கள் வழங்கி வந்தன. கீரன் கொற்றி என்பவள் முன்பு கல்வெட்டில் கண்ட கீரன் கொற்றனுடைய தங்கை. இரண்டு கல் வெட்டுக்களும் அடுத்தடுத்து இருப்பதும் இதனைத் தெளிவாக்குகிறது.

செயிபித என்பது செய்ப்பித்த என்று இருக்க வேண்டும்.

செய்வித்த என்னும் பொருள் உள்ளது.

பளி என்பது பள்ளி என்றிருக்க வேண்டும். ளகர ஒற்று இடாமல் எழுதப்பட்டிருக்கிறது.

அடிக்குறிப்புகள்

1. Madras Epigraphic Collection, 343 of 1927-28.

2.

Early South Indian Palaeography, 1967, p. 281 - 282.

3.

No. 66. Seminar on Inscriptions 1966, p. 67.

4. Madras Epigraphy Collection, 346 of 1927-28

5. Early South Indian Palaeography, 1967, p. 283-84.

ம்

6.

No. 58, p. 66. Seminar on Inscriptions 1966. Historical Tamil Brahmi Inscriptions.