பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

மதநூல்களை மாகதி, அர்த்தமாகதி என்னும் பிராகிருத மொழிகளில் எழுதியிருந்தார்கள். அவர்கள் தமிழிலே தனித்தமிழ் நூல்களை எழுதியதோடு, தமது மதச்சார்பான நூல்களை பிராகிருதம், சமஸ்கிருதம், தமிழ் என்னும் மொழியில் உள்ள சொற்களைக் கலந்து மணிப்பிரவாள நடையில் வசன நூல்களை எழுதினார்கள். மணிப் பிரவாள நூல்களை எழுதுவதற்கு, தமிழில் க்ஷ, ஜ, ஷ, ஹ, ஸ முதலான எழுத்துக்கள் இல்லாதபடியினாலே, இவ்வெழுத்துக்களை எல்லாம் அமைத்துக் கிரந்த எழுத்து என்னும் ஒருவகை எழுத்தைக் கண்டுபிடித்து, அந்த எழுத்தினாலே மணிப்பிரவாள நூல்களையும், பிராகிருத சமஸ்கிருத நூல்களையும் எழுதினார்கள். இந்தக் கிரந்த எழுத்தையும் அவர்கள் பிராமி எழுத்தில் இருந்துதான் உண்டாக்கினார்கள்.

6

இவ்வாறு பௌத்த ஜைனர்களாலே உண்டாக்கப்பட்ட கிரந்த எழுத்து முதலில் அந்த மதத்தினரால் பயிலப்பட்டு வந்தது. பின்னர், பிற்காலத்துச் சோழ அரசர்கள் இந்தக் கிரந்த எழுத்தை ஆதரிக்கத் தொடங்கினார்கள். ஆகவே, கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட ராஜராஜன் (முதலாவன்) பாண்டிய நாட்டை வென்று அந்த நாட்டிலும் கிரந்த எழுத்தை வழங்கத் தொடங்கினான் என்பதற்கு எபிகிராபி சான்று இருக்கிறது. ராஜராஜ சோழன் காலத்திலே, பாண்டி நாட்டில் வழங்கிவந்த வட்டெழுத்து மறைந்து கிரந்த எழுத்து வழங்கத் தொடங்கியது. இந்தக் கிரந்த எழுத்துக் கி.பி. 10-ஆம் நுற்றாண்டு முதல் இப்போதும் தமிழ்நாட்டில் வழங்கி வருகின்றது.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டில் இருந்து பிராமி எழுத்து தமிழ் நாட்டிலே வழங்கத் தொடங்கி, அதுவே காலக்கிரமத்தில் வட்டெழுத் தாகவும், கோலெழுத்தாகவும், கிரந்த எழுத்தாகவும் வெவ்வேறு உருவம் அடைந்து இன்றளவும் வழங்கி வருகிறது.

தமிழ் எழுத்து மட்டுந்தான் பிராமி எழுத்திலிருந்து உண்டா யிற்று என்று நினைக்கவேண்டாம். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, மராட்டி, வங்காளி, தேவநாகிரி முதலிய எழுத்துக்கள் எல்லாம் பிராமி எழுத்திலிருந்தே உண்டானவை. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள எல்லா மொழி எழுத்துக்களும் லத்தீன் எழுத்து எவ்வாறு தாய் எழுத்தாக இருந்ததோ அது போன்று, இந்திய மொழியில் உள்ள

6

எழுத்துக்களுக்கெல்லாம் தாய் எழுத்தாக இருந்தது பிராமி எழுத்தேயாகும்.