பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

165

சாதாரண மிருகங்களின் தோலைவிட, வெள்ளாட்டின் அல்லது செம்மறியாட்டின் தோலை நன்கு பதப்படுத்தி எழுது கருவியாகப் பயன்படுத்தினார்கள். இதற்கு மெம்ப்ரெனா (Membrana) என்று பெயர் வழங்கினர். ஆட்டுத்தோலைச் சுண்ணாம்பு நீரில் ஊறவைத்து, மயிர்களைக் களைந்துவிட்டு, மறுபுறத்தில் உள்ள சதைப் பற்றுகளையும் நீக்கி, மரச்சட்டத்தில் மேல் உலரவைத்து, சீமைச் சுண்ணத்தினாலும் ஒருவகைக் கல்லினாலும் தேய்த்து மெருகு ஏறச் செய்வார்கள். இது நேர்த்தியான எழுது கருவியாகவும், இருபுறத்திலும் எழுதக்கூடியதாகவும் இருந்தது.

இதைவிட நேர்த்தியான எழுதுகருவி, கன்றுக்குட்டியின் தோலினால் செய்யப்பட்டது. இது வெல்லம் (Vellum) என்று பெயர் பெற்றது. இது ஆட்டுத் தோலினால் செய்யப்பட்ட எழுது கருவியைவிட மிக நேர்த்தியாகவும், அழகும், மெருகும் உள்ளதாக வும் இருந்தது. கன்றுக்குட்டித் தோல் என்னும் பொருளுடைய 'வெல்லம்' என்னும் லத்தீன் மொழிச் சொல் பிறகு ஏனைய மிருகங்களின் தோல்களினால் செய்யப்பட்ட எழுதுகருவிகளுக்கும் வழங்கப்பட்டது.

பெர்கமேனா

ச்

தோலினால் செய்யப்பட்ட எழுது கருவிகளுக்கெல்லாம் இன்னொரு பொதுப் பெயரும் வழங்கிவந்தது. அப்பெயர் பெர்கமேனா (Pergamena) என்பது. சிறிய ஆசியாவில் பெர்கமம் என்னும் ஒரு நகரம் இருந்தது. இந்த நகரத்தில் ஏராளமான தோலினால் செய்யப்பட்ட எழுதுகருவிகள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து விற்கப்பட்டன. பெர்கமம் நகரத்தில் செய்யப்பட்டபடியால், இத்தோற் கருவிகளுக்குப் பெர்கமேனா என்று அந்நகரத்தின் பெயரே வழங்கப்பட்டது. கலிங்கநாட்டிலிருந்து வந்த துணி களுக்குப் பண்டைக் காலத் தமிழர் கலிங்கம் என்று பெயர் வழங்கியதைப் போல

பெர்கமேனா என்னும் எழுதுகருவி எப்படி வழக்காற்றில் வந்தது என்பது பற்றி வர்ரோ (Varro) என்பவர் கூறும் கீழ்க்கண்ட செய்தியைப் பிளினி (Pliny) என்னும் யவன ஆசிரியர் தமது 'இயற்கைச் சரித்திர வரலாறு’ என்னும் நூலில் குறித்துள்ளார்; 'பெர்கமம் நாட்டு அரசனான யூமேனஸ் இரண்டாமவன் (Eumenes II, B.C.197-159) என்பவருக்கும், எகிப்து நாட்டு மன்னரான டாலமி (Ptolemy) என்பவருக்கும் தமது