பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

177

பிராஃமி எழுத்துக்கு முன்பு தமிழ்நாட்டில் வேறு வகையான பழைய எழுத்து இருந்ததா? இருந்தது என்று சொல்வதற்கும் சான்று இல்லை. இருக்கவில்லை என்று சொல்வதற்கும் சான்று இல்லை.

பிராஃமி எழுத்துத்தான் முதன் முதல் தமிழர் அறிந்த எழுத்து, அதற்கு முன்பு எந்த எழுத்தும் தமிழில் இல்லை என்று கூறுகிறவர், வேறு பழைய எழுத்து இருந்ததில்லை என்று கூறுவதற்குச் சான்று காட்டவில்லை.

பிராஃமி எழுத்துக்கு முன்பு தமிழில் வேறு எழுத்து இருந்ததா இல்லையா என்னும் கேள்விக்குச் சரியான விடை கூறத்தகுந்தவை சங்ககாலத்து நடுகற்களே. சங்ககாலத்து நடுகற்களில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன என்பதை மேலே சான்று காட்டிக் கூறினோம். அந்த வீரக்கற்கள் கிடைக்குமானால், அக் கற்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டு அந்தக் காலத்தில் வழங்கி வந்த எழுத்தின் வரிவடிவத்தையறியலாம். ஆனால், இது வரையில் சங்க காலத்து நடுகல் ஒன்றேனுங் கண்டுபிடிக்கப்பட வில்லை.

பௌத்தர் ஜைனர் மட்டும் ஆதிகாலத்தில் தமிழ்நாட்டில் பிராஃமி எழுத்தை எழுதினார்கள் என்றால், அக்காலத்தில் பௌத்தர் ஜைனரல்லாத தமிழர் வேறு ஒரு வகையான எழுத்தை எழுதியிருக்க வேண்டும். அந்த எழுத்துக்கள் நிச்சயமாக அக்காலத்து நடுகற்களில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆகவே, கடைச்சங்க காலத்தில் பிராஃமி எழுத்து வழங்கி வந்ததா அல்லது வேறு வகையான எழுத்துவழங்கி வந்ததா என்பதை அறிவதற்கு அக் காலத்து நடுகற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அகழ்வாராய்ச்சி செய்யும் புதை பொருள் ஆய்வாளர் (ஆர்க்கியாலஜி இலாகா) இதுபற்றி இதுவரையில் சிந்திக்கவே இல்லை. இனியாயினும் இதுபற்றிச் சிந்திப்பார்களாக.

தமிழக அரசு தன் சொந்தச் செலவில் ஆர்க்கியாலஜி இலாகா ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறது. இந்த இலாகா, சங்ககாலத்து நடுகற்களைக் கண்டுபிடித்து உதவுமானால் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட வீரக்கற்கள் நிலத்திலே ஆழ்ந்து புதைந்து கொண்டிருக்கும் பதினைந்து அடி அல்லது இருபது அடி ஆழத்திலும் புதைந்து கிடக்கலாம். தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களும் தமிழகத்து ஆர்க்கியாலஜி