பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

189

இந்தச் சாசனத்தின் கருத்தை விளக்கிக் கூறுவதற்கு முன்பு இவ்வெழுத்துக்களைப் பற்றிச் சில கூறவேண்டும். இப்பிராமி எழுத்துச் சாசனத்தில் உயிர்மெய் அகர எழுத்துகள் ஆகாரக் குறியீடு கொடுக்கப் பட்டுள்ளன. (முதல் வரியில் க, ந, இரண்டாம் வரியில் ம, மூன்றாம் வரியில் த, ச, ய ப, நான்காம் வரியில் ண, க, ட, வ, ஐந்தாம் வரியில் த, ப, ஆகிய இவ்வெழுத்துக்கள் ஆகாரக் குறி கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை உயிர்மெய் அகர வெழுத்துகளாகப் படிக்க வேண்டும். மேலும், முதல் வரியில் எட்டாவது எழுத்தாகிய ஸி என்பது வடமொழி அல்லது பிராகிருத மொழி எழுத்தாக எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது வரியில் உள்ள 6, 7, 8, 9-ஆம் எழுத்துகளும் தம்மம் என்று வடமொழி அல்லது பிராகிருத மொழி எழுத்துகளெல்லாம் தமிழ் பிராமி எழுத்துகளே.

மேலும் இச்சாசனத்தில் றன்னகரம் தந்நகரம்போல எழுதப் பட்டு முடி வளைந்து காணப்படுகின்றது. (இரண்டாம் வரி நான்காம் எழுத்தும், மூன்றாம் வரி பத்தாம் எழுத்தும், நான்காம் வரி மூன்றாம் எழுத்தும், எட்டாம் எழுத்தும், றன்னகர எழுத்துக்களே. இவை கோடு பெறாதபடியால் இவற்றை ன் என்று மெய்யெழுத்தாகவே வாசிக்க வேண்டும்.

விளக்கம்:-

+

=

கணிய் = கணி. அஸிரிய்ஈ = ஆசிரியர். குவ் அனிகெ = குவவனிகெ (குவவனுக்கு). தம்மம் = தர்மம். ஈத்தஅ நெடுஞ் = ஈத்தவன் நெடுஞ். நெடுஞ்சழியன் = நெடுஞ்செழியன். பண அன் = பணவன் (பணயன்). வழுத்திய் = வழுதி. கொட்டு பித்தஅ கொத்து பித்த. (கொத்துவித்த), பளிஈய் = பள்ளி.

=

மிகை எழுத்துகளைத்தள்ளி, சந்திகளைப் புணர்த்தி, தவறு களைச் சரிப்படுத்தினால் இச்சாசனத்தின் வாசகம் இவ்வாறு அமையும்:-

கணி நந்தி ஆசிரியர் குவவனுக்குத் தர்மம் ஈத்தவன் நெடுஞ்செழியன். பணயன் கடலன் வழுதி கொத்துவித்த பள்ளி.

திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இந்தச் சாசனத்துக்கு இவ்வாறு பொருள் கூறுகிறார்:-