பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககாலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துக்கள்

முன்னுரை

தமிழ்மொழி மிகப் பழைமையானது. மிகப் பழங்காலத்தி லேயே தமிழர் தமிழை வளர்த்தனர். அவர்கள் தமிழ்நூல்களைச் சுவடிகளில் எழுதினார்கள். நூல்களை எழுதுவதற்கு எழுத்து வேண்டும். எழுத்துக்களையும் அமைத்து நூல் எழுதினார்கள். ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் நூல்கள் எழுதப்படு கின்றன. தமிழ் எழுத்துக்கள் காலத்துக்குக் காலம் மாறிமாறி வந்துள்ளன. எழுத்துக்களின் வரி வடிவம் மாறிக்கொண்டு இருந்த படியால், பண்டைக் காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்தின் வரிவடிவம் இன்னதென்று இப்போது தெரியவில்லை. பண்டைக் காலத்துத் தமிழ் எழுத்து மறைந்து போயிற்று.

கி.மு. 3ஆம் நூற்றாண்டில், அசோக மாமன்னர் பாரத நாட்டை அரசாண்ட காலத்தில், தென்னிந்தியாவிலும், தமிழகத்தி லும், இலங்கையிலும், பௌத்த மதம் வந்து பரவிற்று. அசோக மாமன்னரின் பாட்டனான சந்திரகுப்த மௌரியன் ஆட்சிக் காலத்தில் சமண சமயம் தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும், வந்து பரவிற்று. சமணம், பெளத்தம், என்னும் இரண்டு மதங்களும் பரவுவதற்குக் காரணமாக இருந்தவர் அந்த மதங்களின் துறவிகளே. பௌத்த மதத்தோர்களும், சமண சமய முனிவர்களும், ஊர்களிலும், நகரங்களிலும், போய்த் தங்கள் தங்களுடைய மதங்களைப் பரப்பினார்கள். அசோக மாமன்னன் பொறித்துள்ள கல்வெட்டுக் களில் இரண்டு, மாமன்னனாகிய அவர் தமிழகத்திலும், இலங்கையிலும், பௌத்த மதப் பிக்குகளை அனுப்பித் தர்மவிஜயம் (அறவெற்றி) பெற்றதாகக் கூறுகின்றன. அஃதாவது, பௌத்த தைப் பரவச்செய்ததைக் கூறுகின்றன. அசோக மாமன்னருடைய இரண்டாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும், பதின் மூன்றாம் எண்ணுள்ள பாறைக் கல்வெட்டும் இந்தச் செய்தி களைக் கூறுகின்றன. தென்னிந்தியாவிலும், தமிழகத்திலும் பௌத்த

மதத்