பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

31

வேறுபாடுகளை யறியாத காலத்தில் இவை சரியாகப் படிக்கப்பட வில்லை. பிறகு தென்னிந்திய பிராமி எழுத்தைச் சரியாகப் படிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஆந்திர நாட்டிலே கிருஷ்ணா வட்டாரத்தில் பட்டிப்ரோலு என்னும் ஊரில் பழங்காலப் பௌத்தத் தூபி ஒன்று உண்டு. அந்தத் தூபியைத் திறந்து தொல்பொருள் ஆய்வாளர் ஆராய்ந்து பார்த்தபோது அந்தத் தூபிக்குள் வட்ட வடிவமான கல் பேழை காணப்பட்டது. அந்தப் பேழையின் விளிம்பைச் சுற்றிலும் பிராமி எழுத்து வாசகம் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பிராமி எழுத்துக்கும் வட இந்தியப் பிராமி எழுத்துக்கும் சிறு வேற்றுமை காணப்பட்டது. பட்டிப்ரோலு பிராமி எழுத்து தென் இந்திய பிராமி எழுத்துக்களைச் சரியாகப் படிப்பதற்கு உதவியாக அமைந்தது. தென் இந்தியப் பிராமி எழுத்தைத் திராவிடி என்று கூறினார்கள். பட்டிப்ரோலு பிராமி எழுத்து எபிகிராபியா இண்டிகா என்னும் வெளியீட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

6

தமிழ்நாட்டுப் பிராமி எழுத்துக்களில் தமிழுக்கே தனிச் சிறப்பாக உள்ள ழ, ற, ன என்னும் எழுத்துக்களும் காணப்படுகின்றன. இந்தச் சிறப்பு எழுத்துக்களைப் பிராமி எழுத்து வருவதற்கு முன்னே தமிழகத்தில் வழங்கிவந்த பழைய தமிழ் எழுத்திலிருந்து எடுத்துப் பிராமி எழுத்துக்களோடு அமைத்துக்கொண்டனர் என்று தோன்றுகிறது. பிராமி எழுத்தின் ஒலி வடிவம்

பழங்காலத்தில் பாரத நாடு முழுவதும் வழங்கிவந்த பிராமி எழுத்து பிற்காலத்தில், வேறு எழுத்துக்கள் தோன்றிவிட்ட காரணத்தினால், மறக்கப்பட்டு மறைந்துபோயிற்று. நெடுங்காலத்துக்கு முன்பே பிராமி எழுத்துச் சுவடிகள் மறைந்துவிட்டன. ஆனால், மலைப் பாறைகளிலும் குகைகளிலும் எழுதி வைக்கப்பட்ட பிராமி எழுத்துச் சாசனங்கள் அழியாமல் வட இந்தியாவிலும், தென் இந்தியாவிலும் அங்கங்கே இருக்கின்றன. இவற்றையெல்லாம் தொல்பெருள் ஆய்வுத் துறையினர் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்தனர். பிராமி எழுத்தின் வரி வடிவங்களே காணப்பட்டவை யெல்லாம். அவற்றின் ஒலி வடிவங்கள் மறைந்துபோயின. அவற்றின் ஒலி வடிவங்கள் ஒருவருக்கும் தெரிய வில்லை. அசோக மாமன்னரின் பிராமி எழுத்துக் கல்வெட்டுக் களும், மற்றும் வேறு பல பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களும், அவ்வெழுத்துக்களின் ஒலி வடிவம் தெரியாதபடியால், படிக்கப்