பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

கல்வெட்டுக்களுக்குத் தொடர் பில்லாதவற்றைக் கூறித் தமக்குள்ள தமிழ் வெறுப்பையும் சமற்கிருத வெறியையும் காட்டியுள்ளார். இவர் எழுதியுள்ள தன் சுருக்கம் இது:

எபிகிராபி இலாகாவிலிருந்த ராவ் சாகிப்,எச். கிருட்டிண சாத்திரி 1919ஆம் ஆண்டில் புனாவில் நடைபெற்ற அகில இந்திய முதலாவது ஓரியண்டல் மாநாட்டில், தமிழ்நாட்டுப் பிராமி கல் வெட்டெழுத்துக்களைப் பற்றி ஒரு கட்டுரை படித்தார். திரு.கே.வி. சுப்பிரமணிய அய்யர் 1924ஆம் ஆண்டில் சென்னையில் நடந்த அகில இந்திய மூன்றாவது ஓரியண்டல் மாநாட்டில் அதே பொருள் பற்றி ஒரு கட்டுரை படித்தார். இந்த இரண்டு கட்டுரைகளும் இந்தப் பிராமி எழுத்துக்களின் பொருளை ஒருவாறு கூற முயன்றுள்ளன. இவர்களுடைய இந்த முயற்சிகள் இரண்டு வகையான கேடுகளுக்குக் காரணமாக உள்ளன. 1. இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களிலே, வேறு பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களில் காணப்படாத எழுத்துக்கள் காணப்படுவதால், அந்த எழுத்துக்களைச் சரியாக உச்சரிக்க முடியாதது ஒன்று. 2. இவர்கள் இருவரும் இந்தக் கல்வெட்டுக்களில் சில தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன என்பதை ஒத்துக்கொண்டிருப்பது இன்னொன்று.

திரு. சுப்பிரமணிய அய்யர், இந்தப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்கள் தமிழ்மொழியில் எழுதப்பட்டவை என்று முன்னமேயே முடிவு செய்துகொண்டு இக்கல்வெட்டுக்களில் உள்ள சில எழுத்துக்களுக்கு முன்பின் அறியாத ஒலிகளைக் கற்பித்துக்கொண்டு படித்து அதிகக் குழப்பத்தை உண்டாக்கிவிட்டார். இந்தக் பிராமி சொற்றொடர்களைத் தமிழ்மொழிச் சொற்றொடர்கள்தாம் என்று நிலை நிறுத்தமுடியாத இவருடைய கற்பனைகள், இவரை இவைபற்றி ஆராய்ச்சி செய்யத்தூண்டி, இவருடைய கருத்துக்களுக்கு ஒப்பப் பல வகையான மாற்றங்களைச் செய்துவிட்டது. கிருட்டிண சாத்திரியும் கூட இவை தமிழ்மொழிக் கல்வெட்டுகள் என்பதை ஒப்புக்கொண்டு இவற்றில் தமிழ்ச் சொற்களையும் பிராகிருத மொழிச் சொற்களையும் கலந்து வாசகங்களைத் தாறுமாறாக்கிவிட்டார்.

இந்தக் கல்வெட்டுக்கள் பிராகிருத மொழியில் எழுதப்பட்டவை என்று எனக்குத் தோன்றுகிறது. மிகப் பழைய காலமாகிய கி.மு. 3ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவற்றைத் தமிழ்மொழி என்று கூறித் தமிழுக்குப் பழைமை கொடுப்பது கூடாது. கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்