பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

39

என்று எழுதப்பட்டுள்ளன. இந்தச் சொற்றோடர்களின் இறுதியில் உள்ள குறிகள், இவர்கள் செலவு செய்த பொன்னின் மதிப்பைத் தெரிவிக்கின்றன என்பது இந்தக் குறியீடுகளின் முன் உள்ள ‘பொன்’ என்னும் சொல்லினால் அறிகிறோம். எனவே இந்த அடையாளங் கள் இவர்கள் இக் குகைகளில் கற்படுக்கைகளை அமைப்பதற்குச் செலவு செய்த பொன்னின் அளவை (மதிப்பைத்) தெரிவிக்கின்றன என்பது ஐயமில்லாமல் தெரிகிறது.

அழகர் மலைப் பிராமி எழுத்துக் கல்வெட்டுக்களிலும் குறியீடுகள் காணப்படுகின்றன. ஆனால், குறியீடுகளின் முன்பு 'பொன்' என்னும் சொல் இல்லை. இல்லாமற்போனாலும் இக் குறியீடுகள் செலவு செய்யப்பட்ட பொன்னின் மதிப்பைக் குறிக்கின்றன என்று கருதலாம். அக் குறியீடுகள் இவை: ‘மதுரை பொன் கொல்லன் ஆதன் ஆதன்'

‘மதுரை உப்பு வாணிகன்’

‘பணித வாணிகன் நெடுமூலன்'

‘அணிகன்’

'கொழுவாணிகன் இளஞ்சேந்தன்’

இந்தப் பெயர்களின் இறுதியில் உள்ள குறியீடுகள் இப் பெயருள்ளவர் இக்குகையில் கற்படுக்கைகளை அமைப்பதற்காகச் செலவு செய்த தொகையைக் குறிக்கின்றன என்பது நன்றாகத் தெரிகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிவந்த இந்தக் குறியீடுகள் குறிப்பிடுகிற பொன்னின் அளவு (மதிப்பு) இன்னதென்று இப்போது தெரியவில்லை.

கற்படுக்கைகள் ஏன்?

அந்தப் பழங்காலத்திலே பௌத்த சமயத்துத் தேரர்களும், சைன சமயத்துத் துறவிகளும், ஊர்களில் தங்காமல் ஊருக்கப்பால் காடுகளில், மலைக்குகைகளில் இருந்து தவம் செய்தார்கள். பாயில் படுக்காமல் தரையில் படுப்பது அவர்களுடைய நோன்பு. அவர்கள் இருந்த

குகைகளின் கற்றரைகள் இயற்கையாகக் கரடுமுரடாகவும்

மேடுபள்ளமாகவும் இருந்தன. ஆகவே, அவர்களுடைய சாவகர்கள்