பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

(சாவகர் சிராவக இல்லறத்தார்) கற்றரைகளைச் சமப்படுத்திச் செம்மையாக்கி வழவழப்புள்ள கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தார்கள்.

மழை பெய்தால் பாறைகளின் மேலிருந்து வழிந்து வருகிற மழைநீர், குகை வாயிலின் மேற்பாறை வழியாக விழுந்து குகையின் உட்புறத்தை நனைத்து ஈரமாக்கிவிடும். குகை வாயிலின் மேற்புறப் பாறையிலிருந்து விழுகிற நீர் காற்றினால் உந்தப்பட்டுக் குகை முழுவதும் பாய்ந்து நனைத்துவிடும். அதனால் குகைக்குள் இருக்கும் துறவிகளின் உடம்பு நனைந்து ஈரமாக்கிக் குளிரும் காய்ச்சலும் ஏற்படும். இவ்வாறு நேராதபடி, குகை வாயிலின் மேற்பாறையிலிருந்து மழைநீர் வாயிற்புறத்தில் விழாதபடி தடுத்து மழைநீர் பாறைகளின் இரு புறமும் பக்கவாட்டமாக வழிந்து போகும்படி உளியினால் மேற்புறப் பாறையைச் செதுக்கித் தூம்புபோல அமைத்தனர். இவற்றை யெல்லாம் கற்றச்சரைக் கொண்டு செய்விக்கவேண்டும். கற்றச்சருக்குக் கூலியாகப் பொருள் தர வேண்டும்.

பொருள் செலவு செய்து மலைக்குகைகளில் கற்படுக்கைகளை அமைத்தும் மழைநீர் உள்ளே விழாதபடி தடுத்துப் பக்கங்களில் வழிந்து போகும்படி தூம்புகளைச் செதுக்கியும் கொடுத்தனர். தாங்கள் அளித்த கொடைகளைப் பற்றி ஏடுகளில் தங்கள் பெயர்களை எழுதிவைப்பது உலக இயற்கை. இவற்றை அமைத்துக் கொடுத்தவர் தங்கள் பெயர்களைக் கற்படுக்கைகளிலும், குகைவாயில்களின் மேலும் செதுக்கிவைத்தனர். குகைகளில் இருந்த துறவிகள் பௌத்த-சைன மதத்தவர் ஆகையாலும் அவர்களுக்காகப் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவரும் அந்த மதங்களைச் சேர்ந்தவர் ஆகையினாலும் அந்த மதத்தார் கையாண்டு வந்த பிராமி எழுத்தினால் இதை எழுதி வைத்தார்கள். (சைவ வைணவ மதத்துத் துறவிகள் காடுகளிலும் குகைகளிலும் வசிக்கவில்லை. ஆகவே அவர்களுக்குக் குகைகளில் கற்படுக்கைகள் அமைக்கப்படவில்லை.)

சங்கச் செய்யுட்கள் ஏன் கூறவில்லை?

கடைச் சங்க காலத்திலே (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரையில் எழுதப்பட்ட சங்கச் செய்யுட்களிலே இந்தக் குகைகளைப்

பற்றியும் இங்கு இருந்த முனிவர்

களைப் பற்றியும் ஏன் கூறப்படவில்லை என்று கேள்வி எழுகிறது.