பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

ஆண்டுகளாகத் தமிழரோடு உறவாடிக்கொண்டிருந்த காலத்தில் வேறு மொழிச்சொற்கள் கலவாமல் தூய தமிழ்மொழிதான் வழங்கிற்று என்று கூறுவது பொருந்தாது. சங்க இலக்கியங்களில் தூய தமிழாக இருக்கின்றன என்றால், அவை தமிழ் மரபுப்படி இயற்றப்பட்டவை. அகப் பொருள், புறப் பொருள்களைப் பற்றிப் பாடப்பட்டவை. ஆகவே பழந்தமிழ் மரபு அவற்றில் காணப்படுகின்றன. ஆனால் அந்தக் காலத்திலேயே தமிழ்மொழியில் வேறு மொழிச் சொற்களும் ம் கலந்துவிட்டன. அந்தத் தமிழ் இலக்கியங்கள்தாம் சிலப்பதிகாரமும், மணிமேகலையும்.

பிராமிக்கு முன்பு

பிராமி எழுத்து பௌத்த-சைன மதங்களின் சார்பாகத் தமிழகத்துக்கு வந்தது. பிராமி எழுத்து வருவதற்கு முன்பு தமிழில் வேறுவகையான எழுத்து நடைமுறையில் இருந்தது. தொல்காப்பியம் முதலான பழைய இலக்கண இலக்கிய நூல்கள் பழைய தமிழ் எழுத்தினால் எழுதப் பட்டன. பிராமி எழுத்து தமிழகத்தில் நுழைந்த பிறகு, பழைய தமிழ் எழுத்து மெல்ல மெல்ல ஒதுக்கப்பட்டுப் புதிய பிராமி எழுத்து மெல்ல மெல்ல முதன்மை பெற்றது. இந்த எழுத்து மாறுதல் திடீரென்று ஏற்படவில்லை. பழை எழுத்து மறைவதற்கும் புதிய எழுத்து இடம் பெறவும் பலகாலம் சென்றிருக்க வேண்டும். இரண்டு நூற்றாண்டு களாவது சென்றிருக்க வேண்டும். பௌத்த-சைன மதங்களின் கொள்கை பரப்புதலினாலே பிராமி பிராமி எழுத்து தமிழகத்தில் விளக்கமடைந்தது.

அறிஞர் சிலர் பிராமி எழுத்து வந்தபிறகுதான் தமிழ் மொழியில் இலக்கியங்கள் ஏற்பட்டன என்றும், அதற்கு முன்பு தமிழில் இலக்கிய நூல்கள் எழுதப்படவில்லை என்றும் கூறுகின்றனர். அவர்கள் கூற்று தவறானது. பிராமி எழுத்து தமிழகத்தில் புகுவதற்கு முன்பே தமிழருக்கு உரிய தமிழ் எழுத்தும், நூல்களும் இருந்தன.

·

தமிழ்நாட்டில் பிராமி கல்வெட்டுக்களை எழுதியவர் நன்றாகத் தமிழ் கற்காதவர். அவர்கள் பிராகிருதச் சொற்களையும் சேர்த்துப் பேச்சு நடையில் எழுதியுள்ளனர். அந்தச் சொற்களையும் பிழையாக, பாமரர் பேச்சு நடையில் எழுதியுள்ளனர். மணிய் (மணி), கணிய் (கணி), பணஅன் (பணயன்), வழுத்தி (வழுதி), ஆந்தைய் (ஆந்தை), மத்திரை (மதுரை), பளி (பள்ளி), காவிதி இய் (காவிதி), கொட்டுபி தோன்