பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

45

(கொடுப்பித்தோன்) முதலான கொச்சைச் சொற்களைக் காண்க. சில பிராமி எழுத்து வாக்கியங்கள் வினைச்சொல் (பயனிலை) இல்லாமலே எழுதப்பட்டுள்ளன. யானைமலை, குன்றக்குடி, அழகர்மலை என்னும் இடங்களில் உள்ள கல்வெட்டுக்கள் நன்றாகப் படிக்காதவர்களால் கொச்சைத் தமிழில் எழுதப்பட்டுள்ளன. அதே சமயத்தில் சங்கப் புலவர்களின் உயர்ந்த, சிறந்த செந்தமிழ் நடைச் செய்யுள்களும் வழங்கி வந்துள்ளன. இவ்வாறு, ஒரே சமயத்தில் உயர் தனிச் செம்மொழி நடையும் பிராகிருதம் கலந்த கொச்சைத் தமிழ் நடையும் வழங்கின என்பதை பிராமி எழுத்து வாசகங்களினால் அறிகிறோம். இதற்கு காரணம் பழைய தமிழ் எழுத்தைப் பயின்று வந்ததும் அதே சமயத்தில் புதிய பிராமி பயிலப்பட்டு வந்ததும் என்பது தெரிகிறது. யூபிரிதிஸ், தைகிரிஸ் ஆறுகள் பாயும் மொசப டோமியாவில், பழங்காலத்தில் இருந்த கால்டியா தேசத்தில் ஒரே சமயத்தில் இரண்டு வகையான எழுத்துக்கள் வழங்கி வந்ததை வரலாற்றில் அறிகிறோம். அந் நாட்டு மதகுருமார் தங்களுக்கென்று ஒருவகை எழுத்தை எழுதினார்களாம். அதே சமயத்தில் பாமரக் குடிமக்கள் இன்னொரு வகையான எழுத்தை எழுதினார்களாம். அதுபோலவே, தமிழ்நாட்டில் சங்கப் புலவர் பயின்ற பழந்தமிழ் எழுத்து ஒன்றாகவும், பௌத்த சமண மதத்தவர் எழுதிய புதிய பிராமி எழுத்து வேறாகவும் இருந்தன. இந்த நிலை ஒன்றிரண்டு நூற்றாண்டு இருந்திருக்க வேண்டும். பிறகு பிராமி எழுத்து மிகப்பரவி வளர்ந்ததனால் பழைய தமிழ் வரி வடிவம் மறைந்து போயிற்று.

6

இதை அறியாமல் சிலர், பிராமி எழுத்து தமிழகத்துக்கு வருவதற்கு முன்பு தமிழில் இலக்கியமும், இலக்கணமும் இல்லை என்றும், பிராமி வந்த பிறகுதான் அந்த எழுத்தைக் கொண்டு தமிழ் நூல்கள் எழுதப்பட்டன என்றும் கூறுவது ஏற்கத்தக்கதன்று. அவர்கள் கூற்று தவறு. இதுபற்றி விளக்கமாக எழுதினால் இடம் விரியும் என்று அஞ்சி இதனோடு நிறுத்துகிறோம். தமிழ் நாட்டுப் பிராமி எழுத்துக் கல்வெட்டு எழுத்து மொழிகள் பௌத்த - சமண முனிவர்கள் வாழ்ந்த குகைகளில் எழுதப்பட்டுள்ளன. அவற்றை எழுதினவர் பௌத்த- சமண சாவகர்கள், அவர்கள் பிராகிருதம், தமிழ் இரண்டையும் கலந்த கொச்சைத் தமிழில் பிழையாக எழுதினவைதாம், பிராமியக் கல்வெட்டுக்கள். செந்தமிழ் நடைக்கும் அவர்களுடைய கொச்சை நடைக்கும் தொடர்பு இல்லை. இந்தக் கொச்சை நடையைத்தான் தமிழர்