பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

47

புகுத்திக் கூறவேண்டும் என்று கருதித் தங்களுடைய சொந்தக் கருத்தைப் புகுத்தியது வேறொன்று. இக் கல்வெட்டெழுத்துக்கள் எழுதப்பட்ட காலத்தில் இருந்த தமிழக மரபையும், தமிழர் பழக்க வழக்கங்களையும், அறிந்து அதற்கேற்பப் பொருள் காணாதது மற்றொன்று. இந்தக் காரணங்களினாலே தமிழ் நாட்டுப் பிராமி எழுத்துக்கள் சரியாகப் படிக்கப்படாமல் உள்ளன. ஆகவே இவற்றைப்புதிதாக ஆராய்ந்து முடிவு காண வேண்டி யிருக்கிறது. அவற்றைக் காண்போம்.

அடிக் குறிப்புகள்

1. கிரந்த எழுத்து என்பது தென் இந்தியாவில் வழங்கிவந்த ஒரு வகையான எழுத்து. இந்த எழுத்தைப் பௌத்தரும், சமணரும், தென்னிந்தியாவில் புதிதாக அமைத்தார்கள். கிரந்த எழுத்தை அவர்கள் பிராமி எழுத்திலிருந்து உருவாக்கினார்கள். கிரந்த எழுத்தைப் பிராகிருத நூல்களை எழுதவும் சமஸ்கிருத நூல்களை எழுதவும் பயன்படுத்தினார்கள். கிரந்த எழுத்து குமரிமுனையி லிருந்து வடக்கே விந்திய மலை வரையில் நெடுங்காலம் வழங்கிவந்தது.

2. Madras Epigraphy Report, 1907. Part II, Para 1. P. 60

3. Sangam literature: its cults and cultures, K.A. Nilakanta Sastri, 1962, p.4.

4. The smile of Murugan, Dr.Kamil Zvelabil, 1973, p.25.

5. The smile of Murugan, Dr.Kamil Zvelabil, 1973, p. 140.

6.

7.

8.

9.

P. 323, Epigraphia Indica, Vol. II

The Brahmi Inscription of South India, C.Narayana Rao, pp. 362-376. The New Indian Antiquary, Vol.I, 1938-39.

“பெரியாரை ஞெ மிர்த்த புழற் காய்க் கொன்றை நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்றுறை தவசியர் போல

(நற். 141:3 - 5)

(ஆடாமேனித் தவசியர் அசையாமல் தியானத்தில் இருக்கும் உடம்பையுடைய தவசியர் என்று இதற்குப் பொருள் கொள்வது கூடாது. ஆடாமேனி என்பதற்கு, நீராடாத உடம்பையுடையவர் என்பது பொருள். சைன முனிவர் நீராடுவது கூடாது என்பது அந்த மதக் கொள்கை.)

"உண்ணாமையின் உயங்கிய மருங்கின்