பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அரச்சலூர் பிராமி எழுத்துக்கள்

கோயமுத்தூர் மாவட்டம் ஈரோடு தாலுக்காவில், ஈரோடு காங்கேயம் நெடுஞ்சாலையில் ஈரோடு நகரத்திலிருந்து பன்னிரண்டு கல் தொலைவில் அரச்சலூர் இருக்கிறது. புகழூருக்கும் அரச்சலூருக்கும் முப்பது கல் தொலைவு இருக்கும். அரச்சலூர் நாகமலைமேல் ஏறத்தாழ அறுபது அடி உயரத்தில் இயற்கையாக அமைந்துள்ள குகையை இவ்வூரார் ஆண்டிப்பாறை என்று கூறுகிறார்கள். இந்தக் குகையில் கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் உள்ளன. 1961 ஆம் ஆண்டு மயிலை சீனி வேங்கடசாமி, ஈரோடு புலவர் இராசு மற்றும் சில நண்பர்கள் இந்தக் குகைக்கும் சென்று இங்குள்ள பிராமி எழுத்தை மைப்படி எடுத்து சுதேசமித்திரன், செந்தமிழ்ச் செல்வி இதழ்களில் வெளியிட்டார்கள். பிறகு தொல்பொருள் துறையினர் அங்குச் சென்று இவ்வெழுத்துக்களைப் பார்த்தனர். இதனுடைய வரிவடிவம் இது:

W

6

マス

இந்தப் பிராமி எழுத்து காலத்தால் பிற்பட்டது. இது கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்கவேண்டும். இது இருபத்தேழு எழுத்துக்களைக் கொண்ட ஒரே சொற்றொடராக அமைந்திருக்கிறது.

எபிகிருபி இலாகாவின் 1961 - 62 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த எழுத்துக்களைப் பற்றி அறிமுகப்படுத்தி, தற்காலிகமாக இதைப் படித்துள்ளனர்.2 அதில் இவ்வாறு படித்திருக்கிறார்கள்.

எழுத்துப் புணர்(ரு)த்தான் மா(லை)ய் வண்ணக்கன் (தேவ)ன் (சாத்த)ன்

திரு.ஐ. மகாதேவன் இதை இவ்வாறு படித்துள்ளார்.

ஏழு தானம் பண் வித்தான் மணிய் வண்ணக்கன் தே(வ)ன் சா(த்த)ன்.