பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

2. குட்டு கொடாலகு ஈத்தவன் சொறு அதன் பொன்.

இந்த வாக்கியத்திலும் குட்டு என்னும் சொல் வருகிறது. குட்டு என்பதற்குக் குன்று என்று பொருள் கூறினோம். குன்று என்பதைப் பேச்சு வழக்கில் குட்டு என்று கூறுகிறார்கள். மதுரை வட்டத்து மேலூருக்கு வடக்கே எட்டுக் கல் தொலைவிலுள்ள கருங்காலக் குடியில் இருக்கிற குன்றுகளை அவ்வூரார் குட்டு என்று கூறுகின்றார்கள். அவர்கள் அந்தக் குன்றுகளைப் ‘பஞ்ச பாண்டவர் குட்டு' என்று கூறுகிறார்கள். இது 1911ஆம் ஆண்டு எபிகிராபி அறிக்கை 57ஆம் பக்கத்தில் கூறப்படுகிறது. குன்று என்னுஞ் சொல் குற்று என்றாகிப் பிறகு குட்டு என்றாயிற்று.

இரண்டாவது சொல் ‘கொடாலகு' என்று இருக்கிறது. இதன் பொருள் தெரியவில்லை. 'குட்டு கொடாலகு' என்று இருப்பதைக் கொண்டு, இது, பொடவு ஆக இருக்கலாம் என்று தோன்றுகின்றது. குடங்கு என்பதைத் தவறாகக் கொடலகு என்று எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. ஈத்தவன்-கொடுத்தவன். மூன்றாவது சொல் சொறு. சிறு என்று எழுதப்பட வேண்டியதைச் 'சொறு' என்று பிழையாக எழுதியிருக்கின்றான் கற்றச்சன். ஆதன் என்பதை அதன் என்று எழுதியிருக்கிறான். சிறு ஆதன் என்பது ஓர் ஆளினுடைய பெயர். 'சொறு அதன் பொன்' என்பது சிறு ஆதன் கொடுத்த பொன். அவன் குகையின் கற்படுக்கையை அமைக்கப் பொன் கொடுத்தான். அதன் மதிப்பு இரண்டு குறியீடுகளில் காட்டப்பட்டுள்ளது.

3. பாகன் ஊர் பேத்தன் பிடான் ஈத்தவெ பொன்

27

பாகனூர் என்பது ‘பாகன் ஊர்' என்று பிரித்து எழுதப்பட்டுள்ளது. பாகனூர் பாண்டி நாட்டில் மதுரைக்கு வடக்கே இருந்த ஓர் ஊரின் பெயர். இது பாகனூர்க் கூற்றத்தின் தலைநகரமாக இருந்தது. பிற்காலத்து வேள்விக்குடிச் செப்பேட்டில் பாகனூர்க் கூற்றம் கூறப்படுகிறது. ‘பாகனூர்க் கூற்றமென்னும் பழனக் கிடக்கை நீர்நாடு'7 வேள்விக்குடி என்னும் ஊர் பாகனூர்க் கூற்றத்தில் இருந்தது என்று வேள்விக்குடி செப்பேடு கூறுகிறது. மாகந்தோய் மலர்ச் சோலைப் பாகனூர்க் கூற்றத்துப்படுவது, ஆள்வதானை ஆடல் வேந்தேய்! வேள்விக்குடி என்னும் பெயர் உடையது. ஒங்காத வேற்றானையோ டோதவேல உடன் காத்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பரமேச்வரனால் வேள்விக்குடி என்னப்பட்டது.8