பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

பிராமியைக் கருதியுள்ளார். அக் கண்ணோட்டத்தில் இந்நூலை உருவாக்கியுள்ளார். அரச்சலூர், கொங்கர் புளியங்குளம், குன்னக்குடி, மால கொண்ட, முத்துப்பட்டி, அழகர்மலை, ஆண்டிப்பட்டி, விக்கிரம மங்கலம், அரிட்டாபட்டி, கருங்காலக்குடி, மேட்டுப்பட்டி, கீழை வலவு, மருகால்தலை, அரிக்கமேடு, புகழூர், ஐயர்மலை ஆகிய இடங்களில் காணப்படும் பிராமி எழுத்துள்ள கல்வெட்டுக்கள் குறித்த ஆய்வை இவர் மேற்கொண்டுள்ளார். இவை அனைத்து குறித்தும் அறிஞர் ஐ. மகாதேவன் அவர்களால் விரிவான ஆய்வு நிகழ்த்தப்பட்டிருப் பதைக் காணலாம்.

சங்க காலத்து வரலாற்று நிகழ்வுகளுக்கும் பிராமி கல்வெட்டுக் களில் காணப்படும் செய்திகளுக்குமான உறவுகளை இந்நூலில் விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். இந்நூலில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எழுதிய வேறு பல பிராமி எழுத்துக்கள் மற்றும் நடுகற்கள் தொடர்பான கட்டுரைகளையும் இணைத்துள்ளோம். இத்தொகுப்பு, பண்டைய தமிழகம் குறித்த வரலாற்று ஆய்வுக்கு மூலத்தரவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். சங்க கால நூற்பிரதிகளில் காணப்படும் செய்திகளுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் பிராமி கல்வெட்டு மற்றும் சங்க கால நடுகற்கள் ஆகியவற்றில் காணப்படும் செய்திகள் அமைந்துள்ளன.

இத்தொகுப்புகள் உருவாக்கத்தில் தொடக்க காலத்தில் உதவிய ஆய்வாளர்கள் மா. அபிராமி, ப. சரவணன் ஆகியோருக்கும் இத்தொகுதிகள் அச்சாகும் போது பிழைத்திருத்தம் செய்து உதவிய ஆய்வாளர்கள் வி. தேவேந்திரன், நா. கண்ணதாசன் ஆகியோருக்கும் நன்றி.

ஏப்ரல் 2010 சென்னை 96.

வீ. அரசு

தமிழ்ப் பேராசரியர் தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம்