பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஆண்டிப்பட்டி பிராமி எழுத்து

தொண்டை நாட்டிலே வட ஆர்க்காடு மாவட்டத்துச் செய்யாறு தாலுகாவில் ஆண்டிப்பட்டி என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊரிலே 1967 ஆம் ஆண்டு பழங்காலப் புதையல் கிடைத்தது. இந்தப் புதையலில் 143 ஈயக்காசுகள் இருந்தன. இக் காசுகள் தேய்ந்து அதிலுள்ள எழுத்துக்கள் மழுங்கிக் காணப்பட்டன. இக் காசுகள் சென்னை நகரப் பொருள் காட்சிச் சாலையில், பழங்காசுப் பிரிவில் இப்போது உள்ளன. இந்தப் புதையலைப் பற்றி ‘ஸண்டே ஸ்டாண்டர்டு’ பத்திரிக்கையில் செய்தி வெளி வந்துள்ளது.' பொருட்காட்சிச் சாலையின் பழைய காசு இலாகாவினர் இந்த எழுத்துக்களைத் தற்காலிகமாக ‘அதினன் எதிரான் சேந்தன்' என்று படித்துள்ளனர்.

இந்த நாணயங்களிலுள்ள எழுத்துக்கள் சங்க காலத்தில் வழங்கிவந்த பிராமி எழுத்துக்கள். எனவே இந்தக் காசுகள் கடைச் சங்கக் காலத்தில் கி.பி. முதல் நூற்றாண்டில் வெளியிடப்பட்டவை.

இந்தக் காசுகளில் ஐந்தாறு காசுகளின் நிழற்படத்தை நான் பார்த்தேன். அவற்றில் இந்த எழுத்துக்களின் முழுச் சொற்கள் கிடைக்கவில்லை. சில எழுத்துக்கள் தெரிந்தும், சில எழுத்துக்கள் மழுங்கியும், சில எழுத்துக்கள் மறைந்தும், உள்ளன. அவற்றில் காணப்பட்ட பிராமி எழுத்துக்களைக் கீழே தருகின்றேன்.

...சேந்தன் ஆதி...

...எதிரான் சே...

...எதிரா

...GT GOT GOT?

இவற்றிலிருந்து சேந்தன், எதிரான் என்னும் சொற்கள் மட்டும் நன்றாகத் தெரிகின்றன.

இந்த எழுத்துக்களின் எகர எழுத்தைக் கவனிக்க வேண்டும். இந்த எழுத்து வட்டவடிவமாக நடுவில் புள்ளி பெற்றுள்ளது. பிராமி எழுத்துக்களில் எகர எழுத்து முக்கோண வடிவமாக இருப்பது