பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. விக்கிரம மங்கலம் பிராமிக் கல்வெட்டு

மதுரை வட்டத்துச் சோழவந்தானுக்கு அருகில் விக்கிரம மங்கலம் என்னும் ஊர் இருக்கிறது. இந்த ஊருக்குத் தெற்கே ஒரு கல் தொலைவில் நாக மலைத்தொடரைச் சார்ந்த ‘உண்டான் கல்’ என்னு மிடத்தில் சிறு குன்று இருக்கிறது. இந்தக் குன்றிலே தெற்கு நோக்கிய குகை ஒன்று இருக்கிறது. இயற்கையாக அமைந்துள்ள இந்தக் குகையின் வாயிற்புறம், உட்புறம் குறுகிச் சரிவாகவும் இருக்கிறது. குகையின் உட் புறத்தில் பாறைச் சுவரின் ஓரமாக இரு பக்கத்திலும் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு பக்கத்தில் நான்கு படுக்கைகளும்; இன்னொரு பக்கத்தில் எட்டுப் படுக்கைகளும் காணப்படுகின்றன. இந்தப் படுக்கை களுக்குத் தலையணை அமைப்பு இல்லை. இந்தப் படுக்கைகளில் மூன்று படுக்கைகளின் தலைப்பக்கத்தில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன.

1926 ஆம் ஆண்டில் இங்குள்ள படுக்கைகளும், பிராமி எழுத்து களும் கண்டுபிடிக்கப்பட்டன. சென்னை எபிகிராபி இலாகாவில் 1926- 27 ஆம் ஆண்டு அறிக்கையில் இவைபற்றிய அறிக்கை வெளியிடப் பட்டது.' இந்தக் கல்வெட்டெழுத்துக்கள் 1926ஆம் ஆண்டின் தொகுப்பில் 621, 622, 623 எண் உள்ளவையாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஆண்டு அறிக்கையில் 74ஆம் பக்கத்தில் இவ்வெழுத் துக்களைப் பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது. இந்த எழுத்துக்கள் கி.மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்று கருதப் படுகின்றன. அந்தை பிகானி மகன் வேண், பொதிலை குவிரான் என்னும் பெயருள்ள பௌத்த பிக்குகளின் பெயரை இவ்வெழுத்துக்கள் கூறுகின்றன.

இந்த அறிக்கை கூறுகிறபடி, இப் பெயர்கள் இங்குத் தங்கியிருந்த பௌத்த பிக்குகளின் பெயரைக் கூறவில்லை. இப் பெயர்கள் கற் படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர்களின் பெயரைக் கூறுகின்றன.

+

FL