பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

-

வெள் - அமை என்பது வெள்ளடை என்னும் ‘ஊர்ப் பெயர்'. நிகாமம் என்பது நிகமம். வணிகர் என்பது இதன் பொருள். கொடியோர் என்பது கொட்டுவித்தான் என்னும் சொல். இவ்வாறு கூறுகிற இவர் வேறு பிராமி எழுத்துக்களோடு இதையும் இணைத்துப் பொருள் இ கூறுகிறார். ஆனால் அது பொருந்தவில்லை.

திரு. நாராயணராவ் இதையும் வேறு கல்வெட்டையும் இணைத்து வழக்கம்போல பிராகிருதமாக்கிப் பிறகு அதைச் சமற்கிருதப்படுத்திக் கூறுகிறார். அவர் கூற்றுக்கும் இந்த எழுத்துக்கும் தொடர்பில்லை யாகையால் அதைக் கூறாது விடுகிறோம்.

திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.46 வெள் - அடை நிகமத்தோர் கொடி ஓர்.

வெள் - அடை என்பது வெள்ளடை. இஃது ஓர் இடத்தின் பெயர். நிகமதோர் என்பது வணிகச்சாத்தர். கொடியோர் - என்பது கோடியர் (விறலியர்). கோடர் என்பது நாகர். (கார்கோடன் என்னும் பாம்பின் பெயரிலிருந்து உண்டானது.) கோடர் என்னுஞ்சொல் 'வெள்ளடை என்னும் ஊரில் உள்ள நிகமத்தோர் வாணிகக் குழு)வைச் சேர்ந்த கோடிஓர் (நாகர் இனத்துப் பெண்)' என்று பொருள் கூறுகிறார்.

திரு. ஐ. மகாதேவன் இந்த எழுத்துக்களை இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்.5

"வெள் அறை நிகமதோர் கொடி ஓர்' என்று படித்து, வெள்ளறையில் உள்ள வாணிகச் சாத்தைச் சேர்ந்தவர் இதைக் கொடுத்தார்கள் என்று பொருள் கூறுகிறார். இதை இவ்வாறு படிக்கலாம்: வெள் அறை நிகமதோர் கொடிஓர்

இதை (இந்தக் கற்படுக்கையை)க் கொடுத்தவர் வெள்ளறை வாணிகக் குழுவினர்' என்பது இதன் பொருள்.

விளக்கம் : இந்தக் கல்வெட்டில், இடப்புறத்திலிருந்து நான்காவதாக உள்ள எழுத்தை ஒருவரைத் தவிர மற்றெல்லோரும் தவறாகவே படித்துள்ளனர். எச். கிருட்டிணசாத்திரி, கே.வி. சுப்பிரமணய அய்யர், நாராயணராவ், டி.வி. மகாலிங்கம் ஆகிய எல்லோரும் இந்த எழுத்தை டை என்று தவறாகப் படித்துள்ளனர். ஐ. மகாதேவன் மட்டும் றை என்று சரியாகப் படித்துள்ளார். இந்த