பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

101

கங்கை கொண்ட சோழனான முதலாம் இராஜேந்திர சோழன் உடைய திருமலை சாசனத்தில் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது." (கோபால கிருஷ்ணமாசாரியர் மலர் மாலை)

பல்கலைக் கழகத்துப் பேராசிரியர் நால்வரும், பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறுவது பங்காள (வங்காள) நாட்டினரைத்தான் என்று முடிவு செய்துவிட்டனர். இந்த முடிவின் விளைவாகச் சிலப்பதிகாரம் சங்ககாலத்து நூல் அன்று பிற்காலத்து நூல் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள். 'இவர்கள் கூறுவதில் என்ன தவறு இருக்கிறது’ இவர்கள் கூறுவது சரியாகத்தானே, பொருத்தமாகத்தானே இருக்கிறது’ என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளும்படியாகத்தான் இருக்கிறது இவர்கள் கூறிய முடிவு.

பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறிய பங்காளரைத்தானா? வங்காள தேசத் தவரையா பங்களர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது? மேல்நோக்காகப் பார்க்கும்போது, பங்களரும் வங்காளரும் ஒருவர் போலக் காணப்பட்டாலும், ஊன்றிப் பார்க்கும்போது பங்களரும் வங்காளரும் வெவ்வேறு நாடினர் என்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் கூறுகிற பங்களர் வங்காள நாட்டுப் பங்காளரை அன்று என்பது தெரிகிறது. பங்களர், பங்காளர் என்னும் சொற்கள் ஒரே ஒலியுடைய வாகக் காணப் பட்டாலும் இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருளைக் குறிக்கின்றன என்று தோன்றுகிறது. இதற்கு சாசனக் சான்றுகள் கிடைக்கின்றன.

தென் இந்தியச் சாசனங்கள் என்னும் நூலிலே எட்டாவது தொகுதியிலே கீழ் கண்ட செய்திகள் கிடைக்கின்றன.

66

1. சயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்களநாட்டு வடக்கில் வன்முகைநாட்டு உய்யக்கொண்டான் சோழபுரம்"

2.

66

3.

S.I.I.Vol.VIIl.No.7

சயங்கொண்ட சோழமண்டலத்துப் பங்களநாட்டு முகைநாட்டுக் காட்டுத்தும்பூர்

S.I.I.Vol.VIII.No. 11

பங்களநாட்டுக் காட்டுத்தும்பூர் நந்திகம்பீஸ்வரம்'

S.I.I.Vol.VIII.No.9