பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

மாதவி தன்துறவுங் கேட்டாயோ, தோழீ! மணிமே கலைதுறவுங் கேட்டாயோ, தோழீ!"

ஐயையைக் காட்டித் தேவந்தி கூறியது:

“ஐயந்தீர் காட்சி அடைக்கலங் காத்தோம்ப வல்லாதேன், பெற்றேன் மயலென் றுயிர்நீத்த அவ்வை மகளிவள்தான் அம்மணம் பட்டிலாள் வையெயிற்று ஐயையைக் கண்டாயோ தோழி! மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ!”

111

இந்தச் செய்யுள்களின் அமைப்பும் வனப்பும் எவ்வியும் நயமும் புதுமையாக இருக்கின்றன. படிப்பவர்மனத்தைக் கவர்ந்து கொள் கின்றன. எத்தனை தடவை படித்தாலும் தெவிட்டாமல் இருக்கின்றன. பல மாதங்கள் சென்று படித்தாலும் ஆண்டுகள் கடந்து படித்தாலும் எப்போதும் புது மணம் வீசிக் கொண்டிருக்கின்றன. இது காவியப் புலவனின் கவித்திறன் அன்றோ?

6

சிற்பக் கலைஞரும் ஓவியக் கலைஞரும் இசைப்புலவரும் நாட்டிய நாடகக் கலைஞரும் தத்தம் அழகுக் கலைகளை எழிலுடன் அமைக் கிறார்கள். இவர்களின் நுண்கலைகள் கண் வழியாகவும் செவி வழி யாகவும் கருத்தைக் கவர்ந்து மனத்துக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. இக் கலைகள் எல்லாவற்றையும் விடமிகச் சிறந்த உயர்ந்த கலை காவியக் கலையே. கம்பனுடைய இராமயணமும், திருத்தக்க தேவரின் சிந்தாம ணியும், தோலாமொழித் தேவரின் சூளாமணியும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும், இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரமும் தமிழரின் காவியச் செல்வங்கள். இந்தக் காவியங்களைப்படித்துப் படித்துச் சுவைத்து சுவைத்து இன்புறுவோர் பேரின்பம் அடைகின்றனர். இந்த இன்பத்தை நாமும் அடைவோமாக.