பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

மறப்பு அரும் - மறக்க முடியாத. கேண்மை சுற்றம். அறப் பரிகாரம் - துறந்தாரைப் போற்றுதல் முதலிய அறச் செயல். விருந்து புறந் தருதல் - புதிதாக வந்தவர்களை உபசரித்துப போற்றுதல். வேறுபடு திரு – வெவ்வேறான செல்வம். வீறுபட - பெருமைப்பட. உரிமைச் சுற்றம் - பணிவிடையாளர்கள்.

கோவலனுடைய பெற்றோர் அவனிடம் என்ன எதிர் பார்த்தார்களோ அந்தச் சிறந்த வாழ்க்கை நிறைவேறவில்லை. ஆடல் பாடல் முதலிய வினோதங்களில் மனத்தைச் செலுத்தி மாதவியின் மையலில் சிக்கிப் பொன்னும் பொருளும் இழந்து வறுமையடைந்து கடைசியில் ஒருவரிடமும் சொல்லாமல் மதுரைக்குச் சென்று, அங்குக் கள்ளன் என்று பழியடைந்து இறக்க நேரிட்டது. கண்ணகி, இறந்துபோன தன் கணவனுக்கும் தன் குலத்துக்கும் நேரிட்ட வீண்பழியை நீக்குவதற் காகப் பாண்டியன் சபையில் வழக்காடி வீண்பழியை நீக்கிப் பின்னர் உயிர் நீத்தாள். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வனான மாடல மறை யோன், கன்னியாகுமரிக்குச் சென்று புனித நீராடித் திரும்பி வருகிற வழியில் மதுரையில் வந்து தங்கினபோது கோவலனின் மரணமும் கண்ணகியின் வழக்கும் நடந்தன. பிறகு மாடலன் தன் ஊருக்கு வந்து கோவலன் கண்ணகியரின் பெற்றோருக்கும் ஊராருக்கும் இந்தச் செய்திகளைச் சொன்னான்.

இந்த அவலச் செய்தியைக் கேட்ட கோவலனுடைய தாயும் கண்ணகியினுடைய அன்னையும் மக்களை இழந்த தீராத் துயரத் தினாலும், அவர்களுக்கு நேரிட்ட பெருந்துன்பங்களை எண்ணியும் மன நோயினால் இறந்துபோனார்கள். மாசாத்துவான் தன்னுடைய பெருஞ் செல்வங்களைத் தானதருமம் செய்து வாழ்க்கையை வெறுத்துப் பௌத்த சமயத்தைச் சார்ந்து பௌத்த பிக்குவாகி ஊரைவிட்டுப் போய் விட்டான். மாநாய்கனும் தன்னுடைய பெருஞ் செல்வத்தைத் தான தருமம் செய்து வாழ்க்கையை வெறுத்து ஆசீவக மதத்தைச் சார்ந்து துறவியாகித் தேசாத்தரஞ் சென்றான். இவ்வாறு இவ்விரு பெருஞ் செல்வர்களாகிய வாணிகப் பெருமக்களின் வாழ்க்கை முடிவுற்றது. இவற்றையெல்லாம்,

“செம்பியன் மூதூர்ச் சிறந்தோர்க் குரைக்க மைந்தற் குற்றதும் மடந்தைக் குற்றதும் செங்கோல் வேந்தற் குற்றதுங் கேட்டுக்