பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

கோவலன் தாதை கொடுந்துயர் எய்தி

மாபெருந் தானமா வான்பொருள் ஈத்தாங்கு இந்திர விகாரம் ஏழுடன் புக்காங்கு

அந்தர சாரிகள் ஆறைம் பதின்மர் பிறந்த யாக்கைப் பிறப்பற முயன்று துறந்தோர் தம்முன் துறவி யெய்தவும் துறந்தோன் மனைவி மகன்துயர் பொறாஅள் இறந்ததுய ரெய்தி இரங்கிமெய் விடவும் கண்ணகி தாதை கடவுளர் கோலத்து அண்ணலம் பெருந்தவத் தாசீ வகர்முன் புண்ணிய தானம் புரிந்தறங் கொள்ளவும் தானம் புரிந்தோன் தன்மனைக் கிழத்தி நாள்விடுஉ நல்லுயிர் நீத்துமெய் விடவும்

(சிலம்பு: நீர்ப்படைக் காதை 87-102)

வாழ்த்துக் காதையிலும் இந்தச் செய்தி கூறுப்படுகிறது. “கோவலன் தன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் தன்னுயிர் நீத்துதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவும் கேட்டாயோ அன்னை மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ அன்னை.

99

(காவற்பெண்டரற்று)

117