பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

127

“ஒருத்தி தன் கணவன் கொலையுண்டு கிடந்த நிலைகண்டு பாடியதாக ஒரு செய்யுள் யாப்பருங்கல விருத்தியிலும், பேராசிரியர் உரை முதலியவற்றிலும் காணப்படுகிறது. அது வருமாறு:-

“கண்டகம் பற்றிக் கடகமணி துளங்க

ஒண்செங் குருதியின் ஓஓ கிடப்பதே - கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுத கண்ணீர் துடைத்த கை.

இரண்டாமடி ஐஞ்சீராய் மிக்கு வந்துள்ளது. ஆரிடப்போலி அல்லது ஆரிட வாசகம் என்று இதனைக் கூறுவர். ஆரிடம் அல்லது ஆர்ஷம் என்பதனால் இதுமிக்க பழைமை வாய்ந்ததெனல் துணியப் படும். இச்செய்யுள் பத்தினிச் செய்யுளென வழங்கப்படுதலினாலே, பத்தினித் தெய்வமாகிய கண்ணகி வரலாறு பற்றியதென்றே கொள்ளத்தக்கது. இங்ஙனமாகப் பழையதொரு வரலாறு பற்றியே சிலப்பதிகாரக் கதைப் பொருள் தோன்றியதாகும்." (பக்கம் 105-106)"

வையாபுரிப் பிள்ளையின் ஆராய்ச்சியை அப்படியே பின்பற்றுகிற அவருடைய நண்பரான திரு. K. A. நீலகண்ட சாஸ்திரி, தாம் எழுதிய 'மணிமேகலை சிலப்பதிகாரக் காலம்' என்னும் ஆங்கிலக் கட்டுரை யிலே, பிள்ளையவர்கள் கூறிய கருத்தையே எழுதுகிறார்-

“ஒரு பெண்மணி குருதியில் கிடக்கிற தன் கணவனின் இறந்த உடம்பைக்கண்டு புலம்பியதாக ஒரு பழைய பழைய வெண்பாவை யாப்பருங்கல விருத்தி மேற்கோள் காட்டுகிறது. இந்தச் செய்யுள் பத்தினிச் செய்யுள் என்று கூறுப்படுகிறது. இதில், கண்ணகி கதையின் அடிப்படையான கருத்து உள்ளது என்பதில் ஐயமில்லை. இது ஆரிடச் செய்யுள் எனப்படுகிறது. இச்செய்யுளைச் சிலப்பதிகார நூலுக்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்.

وو

"The Yapparungala Viruthi reproduces and old Venba in which a woman laments over the dead body of her husband lying in a pool of blood-and the Verse is marked pattini Ceyyul-song of the chaste wife. There can be no doubt that we are here right in the heart of Kannaki story and as this verse is called 'Arida' it must be taken to have preceded the Cilappadikaram." (University of Ceylon Review Vol. VII.p.p. 21-27.)