பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

129

என்பதற்கு என்ன சான்று உள்ளது? பத்தினிச் செய்யுள், கண்ணகியார் பாடியது என்றும் கண்ணகியாரைப்பற்றியது என்றும் இவர்கள் கருதியது பிழையான கருத்தாகும். இவர்களின் கருத்துக்கு நேர்மாறாக இச் செய்யுளின் அகச்சான்று இருக்கிறது. இச் செய்யுள் கோவலனை யும் கண்ணகியையும் பற்றியது அல்ல. அவர்களைப்பற்றி இந்த வெண்பாவில் ஒன்றும் கூறப்படவில்லை. வேறு யாரைப்பற்றியோ கூறுகிறது. செய்யுளைப் படித்துப் பாருங்கள்.

66

'கண்டகம் பற்றிக் கடகமணி துளங்க

ஒண்செங் குருதியின் ஓஓகிடந்ததே - கெண்டிக் கெழுதகைமை யில்லேன் கிடந்தூடப் பன்னாள் அழுதகண் ணீர்துடைத்த கை.

செங்குருதியில் (இரத்தத்தில்) தோய்ந்து இறந்துகிடக்கிறான் ஒரு வீரன். அவன் கையிலே உடைவாள் (கண்டகம்) பிடித்திருக்கிறான். அல்லா மலும் அவன் கையில் கடகம் அணிந்திருக்கிறான். அது மணிகள் பதிக்கப்பட்ட விலையுயர்ந்த கடகம். இச் செய்யுளின் முதல் இரண்டடிகள் இவற்றைக் கூறுகின்றன. யாரோ யாரோ ஒரு வீரன் போர்க்களத்தில் இறந்துகிடப்பதை இச் செய்யுள் கூறுகிறது.

கோவலன் கொலையுண்டிறந்தபோது அவன் கையில் மணிக் கடகம் இல்லை; கட்டாரியும் இல்லை. இவை இரண்டையும் உடைய ஒருவன் இறந்துகிடப்பதாக இச் செய்யுள் கூறுகிறது. செய்யுளில் அகச் சான்று இவ்வாறு இருக்க, இதில் கூறப்படுகிறவன் கோவலன் என்று இந்த மூன்று அறிஞர்களும் கருதுகிறார்கள்! யாரோ ஒரு போர் வீரன் போர்க்களத்திலே இறந்துகிடக்கிறான் என்பதையும், போர் முடிந்த பிறகு அவ்வீரனுடைய மனைவியாகிய பத்தினிப் பெண் அவன் இறந்து கிடக்கும் நிலையைக்கண்டு புலம்பியதையும் இப்பத்தினிச் செய்யுள் பட்டப் பகல்போல் தெரிவிக்கிறது. அகச் சான்று தெளிவாக இருக்கிறது. அப்படியிருந்தும், இம்மூவரும், இறந்து கிடப்பவன் கோவலன் என்று கூறுகிறார்கள். இவர்கள் கூறுவதைப் பகுத்தறிவுள்ள உலகம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

இறந்துகிடப்பவன், கையில் மணிக் கடகம் அணிந்திருப்பதை இச்செய்யுள் கூறுகிறது. கோவலன் மதுரையில் கொலையுண்டிருந்த போது, மணிக் கடகம் அணிந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறவில்லை. செல்வங்களை எல்லாம் இழந்துவிட்ட கோவலனிடம் மணிக்கடகம்