பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

இச்செய்யுளைக்குறித்து, வையாபுரிப் பிள்ளையவர்கள் தமது. "இலக்கிய மணிமாலை” என்னும் நூலில் இவ்வாறு எழுதுகிறார்:-

66

66

"இவள் (கண்ணகியார்) வரலாறு ஒருபடியாக உருப்பெற்ற காலத்து, அவலச் சுவைமிகுந்த இப்பகுதியுடன் பிற கதைப் பகுதிகளை யும் அமைத்து வெண்பாவினால் நூல் ஒன்று ஒரு கவிஞன் செய்திருந் தானென்று கொள்ளலாம். (தொல்.சொல்.100) தெய்வச் சிலையார் கூறும் வெண்பா இந்நூலைச் சேர்ந்ததாகலாம். 'ஆரிடப் போலி அல்லது ஆரிடவர்க்கம்' என்று முதற்செய்யுள் (பத்தினிச் செய்யுள்) குறிப்பிடப் படுவதால், இந்நூல் சிலப்பதிகாரத்திற்கு முற்பட்டதாதல்வேண்டும். எனவே இக்காவியத்துக்கு (சிலப்பதிகாரத்துக்கு) முன்பே கண்ணகி வரலாறு தோன்றி வளர்ந்துள்ளதெனக் கருதுதல் தகும்” (இலக்கிய மணிமாலை பக்கம் 135)

சிலப்பதிகாரத்துக்கு முன்பே கண்ணகி வரலாறு பற்றிய ஒரு வெண்பா நூல் இருந்தது என்று கூறுகிற வையாபுரிப் பிள்ளைக்கே இதுபற்றி உறுதியான நம்பிக்கை இல்லை. ஏனென்றால், இவரே இன்னொரு இடத்தில் இதற்கு மாறுபட எழுதுகிறார். தமிழ் இலக்கிய சரிதத்தில் காவிய காலம் (1957) என்னும் நூலில் இவர், இக்கருத்துக்கு நேர்மாறாக இவ்வாறு எழுதுகிறார்:-

"சிலம்பு

அதிகாரம் என்னும் பெயர் நயம்பெற அமைந்த தாகும். இதில் கட்டுப்படுத்துதற்குரிய முன்னூல் முதலியன.

இந்த ஆராய்ச்சியில் பிள்ளையவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்கிற திரு. நீலகண்ட சாஸ்திரி, சிலப்பதிகாரத்துக்கு முன்பு ஒரு வெண்பா நூல் இருந்திருக்கக்கூடும் என்று பிள்ளையவர்கள் கூறி யதையொட்டி தமது ஆங்கிலக் கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்:-

"Another Venba of a narrative character refering to the trouble Kovalan got into at Madurai is cited by Deivaccilaiyar in his commentary on Tolkappiyam Sol. 100. Hence the superb work of Ilango like the Ramayana of Valmiki must be taken to clothe in the best literary form a moving story of wide appeal which found expression in several other works besides though not of equal merit." (University of Ceylon Review Vol. VII. 1949)

முதற்கோணல் முற்றும் கோணல் என்பது பழமொழி. வையாபுரி யாரும் நீலகண்டரும் அடிப்படையிலேயே தவறான கருத்தை