பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

135

வைத்துக்கொண்டு அதன்மேல் ஆராய்ச்சிக் கட்டடத்தைக் கட்டுகிறார் கள். அடிப்படையே அழிந்து விட்ட பிறகு கட்டடம் எப்படி நிற்க முடியும்? "இவள் (கண்ணகி) வரலாறு ஒருபடியாக உருப்பெற்ற காலத்து அவலச் சுவை மிகுந்த இப்பகுதியுடன் பின்கதைப் பகுதி களையும் அமைத்து வெண்பா யாப்பியல் நூல் ஒன்று ஒரு கவிஞன் செய்திருந்தானென்பது கொள்ளலாம். தெய்வச் சிலையர் கூறும் வெண்பா இந்நூலைச் சேர்ந்ததாகலாம்” என்று தங்கள் கருத்தை (யூகத்தைத்) தெரிவிக்கிறார்கள் வையாபுரியாரும் நீலகண்டரும். (சிலப்பதிகாரத்துக்கு முன்னூல் முதலியன இல்லை என்று வையா புரியார் மற்றோர் இடத்தில் எழுதியிருப்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.)

இவர்கள் காட்டிய பத்தினிச் செய்யுள், கண்ணகி கோவலரைப் பற்றியது அன்று என்று மேலே அகச்சான்று புறச்சான்றுகள் காட்டி நிறுவப்பட்டது. எனவே, கோவலன் கண்ணகியார் வரலாறு ஒரு பழைய கட்டுக்கதை என்று இவர்கள் நிலைநாட்ட எடுத்துககொண்ட முயற்சி வீண் முயற்சியாயிற்று. இவர்களுடைய போலிக் காரணங்கள் சரிந்து விழுந்தபிறகு, அதனோடு மற்ற யூகங்களும் சரிந்து விழுந்து விட்டன.

ஒரு புலவன் வெண்பாவினால் ஒரு நூல் இயற்றியிருக்கக்கூடும் என்றும், யாப்பருங்கல உரையாசிரியர் காட்டும் பத்தினிச் செய்யுளும், தெய்வச்சிலையார் மேற்கோள் காட்டும் “காதலியைக் கொண்டு என்னும் வெண்பாவும் அந்நூலைச் சேர்ந்தவையாக இருக்கக் கூடும் என்றும், ஆகவே, கோவலன் கண்ணகியார் கதை ஒரு பழைய கதை என்றும், அப்பழைய கதையை ஆதாரமாகக்கொண்டு இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்றும் பிள்ளையும் சாஸ்திரியாரும் ஒரு கற்பனையைக் கட்டுகிறார்கள். இவர்கள் இட்டுக் கட்டிக் கூறுவதுபோல ஒரு பழைய வெண்பா நூல் உண்மையில் இருந்திருக்குமானால் அந் நூற் பெயரையும் அந்நூலாசிரியரின் பெயரையும் யாப்பருங்கல உரையாசிரியரும், தெய்வச்சிலையாரும், அடியார்க்கு நல்லாரும், அரும்பத உரையாசிரியரும், இளங்கோ அடிகளும் தமது உரைகளிலும் நூல்களிலும் கூறியிருப்பார்கள் அன்றோ? இச்செய்யுள் ஆரிடச் செய்யுள் என்று கூறப்படுவதால், இச் செய்யுளைக்கொண்ட நூலை இயற்றியவர் பேர்போன இருடியாகத் தானே இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட இருடியின் பெயரும் அவர் இயற்றிய நூலின் பெயரும் சிறப்பாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும்