பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

கூறுகிறார். ஷ நற்றிணைச் செய்யுளில் தமது கருத்துக்கு ஒத்தாற்போலச் சில திருத்தங்களையும் செய்துகொள்கிறார். குருகார் கழனி என்பதைக் குருகார் துழனி என்றும், கேட்டோர் அனையார் என்பதைக் கேட்டோர் இனியார் என்றும் தமது மனம் போனபடி திருத்திக்கொள்கிறார். பிறகு, “இங்ஙனம் வேங்கைக்கீழ் நின்ற ஒரு முலையறுத்த திருமாவுண்ணி என்பவள், கோவலன் மனைவியன்றி வேறு யாவர் உளர்?” என்று கேட்கிறார். மேலும், "இந்நற்றிணைப் பாட்டுப் பாடியவர் மதுரை யாசிரிய ரான சங்கப் புலவர் ஆகலின், தம் ஊரினும் பிறவிடத்திலும் நிகழ்ந்த கண்ணகி செய்தியையே தாம் கேட்டறிந்தபடி கூறுவாராயினர் என்பதும், ஒரு முலை குறைத்தவளாய் வேங்கை மரத்தை யடைந்தவள் அப்பத் தினியேயன்றி வேறிலர் என்பதும் திண்ணமாம்” என்றும் எழுதினார்.

வேங்கை மரம், ஒருமுலை யறுத்தல் என்னும் இந்த இரண்டு குறிப்புகளைக் கொண்டு, கண்ணகியாரும் திருமாவுண்ணியும் ஒருவரே என்று திரு. மு. இராகவையங்கார் முடிவு கூறுகிறார்.

திரு.எஸ். வையாபுரிப் பிள்ளையவர்களும் இதுபற்றித் தமது கருத்தை எழுதியுள்ளார். திருமாவுண்ணியின் கதை பழைய கதை என்றும் அக்கதையிலிருந்து கண்ணகியின் கதை தோன்றியது என்றும் இவர் கருதுகிறார். இவர் தமது "இலக்கிய மணிமாலை" என்னும் நூலிலே கீழ்வருமாறு எழுதுகிறார்:-

66

'இக் காவியத்துக்கு (சிலப்பதிகார காவியத்துக்கு) முற்பட்ட பண்டைக் காலத்தே இவ்வகை வரலாறு வழங்கிய துண்டோ என வினவலாம். ஒரு சான்று நற்றிணையில் உளது. திருமாவுண்ணி யென்பவள் தன்மீது அன்பற்றுத் துறந்து தனக்கு அயலான்போலாகி விட்ட தன் காதலனைப் பற்றிக் கவலைகொண்டு வருந்தினா னெனவும், பின் தனது ஒரு முலையைத் திருகி யெறிந்து வேங்கை மரத்தின் கீழ் நின்றானெனவும் ஒரு வரலாறு இச்சங்க நூலில் வருகின்றது.

எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்

குருகார் கழனியின்

இதணத் தாங்கண்

ஏதி லாளன்

கவலை கவற்ற

ஒருமுலை யறுத்த

திருமா வுண்ணி