பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

145

திருமாவுண்ணி என்னும் மங்கை வேங்கை மரத்தின்மேல் பரண் அமைத்துக்கொண்டு காவல் இருந்தபோது, முன்பின் அறியாத இளைஞன் ஒருவன் அவளிடம் வந்து அவளை மணம் புரிவதாகக் கூறி அவளை நம்பச் செய்தான். பிறகு அவர்கள் காந்தர்வ முறைப்படி மணந்து இன்புற்றனர். பிறகு அந்த இளைஞன். திரும்பி வந்து ஊரார் அறிய அவளை மணம் புரிவதாகச் சொல்லிப் போய்விட்டான். போனவன் திரும்பி வரவே இல்லை; நெடுநாள் ஆகியும் அவன் திரும்பி வரவில்லை. அவன் அவளை அறவே கைவிட்டான். அதனால் திருமாவுண்ணி கவலைகொண்டு வருந்தினாள். அவள் கற்புள்ள மங்கை யாகையால், வேறு மணம் புரிய முடியாது. இவள் செய்தியை யறிந்தவர்கள், இவள்மீது இரக்கங் கொண்டனர். இது தான் நற்றிணைச் செய்யுளில் கூறப்படுகிற திருமாவுண்ணியின் வரலாறு.

இவ் வரலாற்றில் திருமாவுண்ணி ஒரு முலை குறைத்தவள் என்று கூறப்படுகிறாள். ஏன் இவ்வாறு கூறப்படுகிறாள்? ஒருமுலை குறைத்தல் என்றால் என்ன? இது பற்றி அடுத்த கட்டுரையில் எழுதப் போகிறபடியால் இப்போது ஆராய வேண்டியதில்லை. ஆனால், ஒன்றுமட்டும் கூற விரும்புகிறோம். ஒரு முலை இழந்த பெண்கள் அக்காலத்தில் கண்ணகியைத் தவிர வேறு சிலரும் இருந்தார்கள் என்பதே.

இங்கு நாம் ஆராய்வது வேங்கை மரத்தைப்பற்றியும் அதன் மேல் கட்டப்பட்ட பரணைப் பற்றியுமே. தமிழரின் பழங்கடவுளாகிய, முருகன், பழந்தமிழர் முறைப்படி வள்ளியைக் காதல் மணம் புரிந்தது, வள்ளி வேங்கை, மரத்தின் மேல் பரணில் இருந்து தினைப்பயிரைக் காத்துக்கொண்டிருந்தபோதுதான் வேங்கை மரத்தண்டை இருந்து காத்த பெண்கள் திருமாவுண்ணியைப் போன்று பல பெண்கள் அக் காலத்தில் இருந்தனர் என்பதைச் சங்க நூல்களிலிருந்து அறிகிறோம்.

இனி, திருமாவுண்ணியும் கண்ணகியும் வெவ்வேறு மகளிர் என்பதையும், அவர்கள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு இடத்தில் வெவ்வேறு காரியத்துக்காக வேங்கை மரத்தண்டையிருந்தனர் என்பதையும் விளக்கிக் கூறுவோம். திருமாவுண்ணி இருந்த வேங்கை மரம் வயலின் மத்தியில் இருந்த வேங்கை மரம்; வயலின் மத்தியில் இருந்த வேங்கை மரம்; கண்ணகி இருந்த வேங்கைமரம் காட்டிலே மலையின்மேலே வளர்ந்திருந்த வேங்கை மரம். திருமாவுண்ணி இருந்த