பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

வேங்கை மரம் பரண் கட்டப்பட்ட வேங்கை மரம். கண்ணகி இருந்த வேங்கை மரம் பரண் கட்டப்படாமல் மலைமேல் இருந்த வேங்கை மரம்.

“எரிமருள் வேங்கைக்

கடவுள் காக்கும்

குருகார் கழனி

இதணத் தரங்கண்

என்று திருமாவுண்ணி இருந்த வேங்கை மரத்தை நற்றிணைச் செய்யுள் கூறுகிறது.

கண்ணகி நிழலுக்காக நின்ற வேங்கை மரமோ, காட்டிலே மலை மேலே இருந்தது என்பதைச் சிலப்பதிகாரம் தெளிவாகக் கூறுகிறது.

66

னெடுவேள் குன்றம்

அடிவைத் தேறிப்

பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ்

கண்ணகியார் நின்றார் என்று சிலப்பதிகாரம் (கட்டுரை காதை 190-191) கூறுகிறது. மலை வேங்கையின்கீழ்க் கண்ணகி யார் நின்றதைக் குற மகளிர் கண்டு, போல்வீர்! மனநடுங்க முலையிழந்து வந்து நின்றீர். யாவிரோ?" என்று வினவியதாகச் சிலம்பு (உரைப்பாட்டு மடை) கூறுகிறது. மேலும்,

66

கானநறு வேங்கைக்

கீழாளோர் காரிகையே

காநறு வேங்கைக்

கீழாள் கணவனொடும்

வானக வாழ்க்கை

மறுதரவோ வில்லாளே

என்றும்,

66

'கான வேங்கைக்

கீழோர் காரிகை

தான்முலை யிழந்து

தனித்துயர் எய்தி

(குன்றக் குரவை)

(காட்சிக் காதை 57-58)