பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

153

கண்ணனையே மணம் செய்வதாக உறுதிகொண்டார். காதல் உணர்ச்சி பெருகிற்று. நாச்சியார் தமது காதல் செய்தியைத் தாமே தம் பா சுரங்களில் கூறுகிறார். தமது காதலைத் தமது நகிலின்மேல் வைத்துக் கூறுகிறார்.

“அவரைப் பிராயம் தொடங்கி என்றும்

ஆதரித்து எழுந்தஎன் தடமுலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்

தொழுதுவைத்தேன், ஒல்லை விதிக்கிற்றியே'

(நாச்சியார் திருமொழி 1. 4.)

என்று காம தேவனை இவர் வேண்டுகிறார்.

தமது தணியாத காதலைத் தமது கொங்கைமேல் ஏற்றி இன்னும் பல இடங்களில் கூறுகிறார்.' மானிடராகப் பிறந்த நாச்சியார் தெய்வ மாகிய கண்ணனைக் காதலித்து நெடுங்காலம் அவர் வரவை எதிர் பார்த்திருக்கிறார். கண்ணன் வரவே இல்லை. கடைசியில் நாச்சியார் தமது வாழ்க்கையை வெறுக்கிறார். தாம் காதலித்த காதலன் தம்மைப் புறக் கணித்துவிட்டபடியால், இனித் தமக்கு இன்ப வாழ்வு இல்லை, மண வாழ்க்கை இல்லை, தமது வாழ்வு அழிந்துவிட்டது என்று துன்புறுகிறார். தமது கொங்கையைப் பிய்த்து எறிவதாகக் கூறுகிறார். இங்குத்தான், நமது ஆராய்ச்சிக்கு உண்மைப் பொருள் விளங்குகிறது. அச்செய்யுள் இது: “உள்ளே உருகி நைவேனை

உள்ளோ இலளோ என்னாத கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் கோவர்த் தனனைக் கண்டக்கால்

கொள்ளும் பயன்ஒன்று இல்லாத

கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட்டு அவள் மார்பில்

எறிந்துஎன் அழலைத் தீர்வேனே’

(நா. திருமொழி 13)

என்று, தமது கொங்கையை அடியோடு பறித்து எறிந்து விடுவ தாகக் கூறுகிறார். இதிலிருந்து கொங்கை அறுத்தல் என்பதற்கு உண்மைப் பொருள் தெரிகிறதல்வா? ஆண்டாள், ‘தமது இன்ப வாழ்வு அழிந்து விட்டது, மணவாழ்க்கை இழக்கப்பட்டது' என்று கூறுவதைத்தான் இவ்வாறு தமது கொங்கையைக் கிழங்கோடு பறித்து எறிவதாகக் கூறுகிறார்.