பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

உயிர் நீத்தார்.

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

(தீத்தொழிலாட்டியேன் யான்-குறத்தியர் கேட்கத் தீத்தொழி லாட்டியேன் யான் என்று சொல்லி. ஏங்கி - என்றது சொல்லி என்றவாறு. பழைய அரும்பதவுரை.)

கண்ணகியார் இறந்து போனதைக் காவியப் புலவரான இளங்கோ அடிகள் அழகாகக் கற்பனை செய்துள்ளார். தேவர்கள் கோவலனை விமானத்தில் ஏற்றிக்கொண்டு, உயிர் விட்டுக் கொண்டிருக்கும் கண்ண கியார் இடத்துக்கு வந்து அவனோடு அவரை விமானத்தில் ஏற்றிக் கொண்டு வானுலகம் சென்றார்கள் என்று இளங்கோவடிகள் கற்பனை செய்கிறார். சிலப்பதிகாரம் காவிய நூல் ஆகையால், காவியத்துக்குக் கற்பனை வேண்டியிருக்கிறது. இந்தக் கற்பனை காவியத்துக்கு வியப்புச் சுவையைத் தருகிறது. மேலும், சிலப்பதிகாரம் நாடக நூல் ஆகையாலும், இந்தக் கற்பனைக் காட்சி, தேவர்கள் கோவலனோடு விமானத்தில்வந்து இறங்கி மனித உருவத்தைவிட்டுத் தெய்வ உருவத்தைப் பெற்ற கண்ணகியை அவனோடு ஏற்றிக் கொண்டு தேவருலகத்துக்குச் செல்லுங் காட்சி நாடகத்துக்குச் சிறப்பையளிக்கிறது. வியப்புச்சுவை யளிக்கிற இந்தக் காட்சியை இளங்கோ அடிகள் தம்முடைய காவியத்தில் அழகாகக் கற்பனை செய்திருக்கிறார்.

"தொழுநாள் இதுவெனத் தோன்ற வாழ்த்திப்

பீடுகெழு நங்கை பெரும்பெயர் ஏத்தி

வாடா மாமலர் மாரி பெய்தாங்கு

அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்

கோநகர் பிழைத்த கோவலன் தன்னொடு

வான ஊர்தி ஏறினன் மாதோ

கானமர் புரிகுழல் கண்ணகி தானென்

(கட்டுரை காதை, 194-200)

மேலும், இளங்கோ அடிகள் இந்தக் கற்பனையைக் குன்றக் குரவையிலும் உறுதிப் படுத்துகிறார்.

66

மணமதுரையோ டரசுகேடுற

வல்வினைவந் துருத்தகாலைக்

கணவனையங் கிழந்துபோந்த

கடு வினையேன் யானென்றாள்