பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

"Manimekalai (XXVIIL 141-146) makes the father of Kovalan say that Kovalan and Kannaki will be present at the Buddha's preaching in Kapilavastu and attain release and that he too would be there at the time. Is it possible after this to dream of treating the anthors of the epics, the hero and heroiue of the poems and the Cera monarch Cenkuttuvan as historical contemporaries?” (University of Ceylon Review Vol. VII (1949) 21-27)

இவ்வாறு ஒரே பல்கலைக் கழகத்தில் இருந்த இரண்டு பேராசிரியர்களும் கூறுகிறார்கள். முழு உண்மைபோலத் தோன்றுகிற இவர்கள் கூற்று சரியானதுதானா, ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதை ஆராய்வோம். ஆராய்வதற்கு முன்ர், இவர்கள் காட்டுகிற மணிமேகலை நூலின் வாசகத்தைத் தெரிந்துகொள்வோம்.

கோவலன் தந்தையாகிய மாசாத்துவான், மணிமேகலையை வஞ்சிமாநகரத்திற் கண்டபோது, அவர் அவளிடம் இவ்வாறு கூறுகிறார்: 'இன்னுங் கேளாய், நன்னெறி மாதே! தீவினை உறுப்பச் சென்றநின் தாதையும் தேவரிற் றோற்றிமுற் செய்தவப் பயத்தால் ஆங்கத் தீவினை இன்னுந் துய்த்துப் பூங்கொடி! முன் அவன் போதியின் நல்லறம் தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கி காதலி தன்னொடு கபிலையம் பதியில் நாதன் நல்லறம் கேட்டுவீ டெய்துமென்று அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச்

சொற்பயன் உணர்ந்தேன், தோகை! யானும் அந்நாள் ஆங்கவன் அறநெறி கேட்குவன்

99

(கச்சிமாநகர் புக்க காதை 137-147)

மணிமேகலை வஞ்சிமாநகரத்திற்குச் சென்று பத்தினிக் கோட்டத்தில் தெய்வமாக இருந்த கண்ணகியாரைக் கண்டு வணங்கிய போது கண்ணகியார் மணிமேகலைக்கு இவ்வாறு கூறுகிறார்:

66

"நீங்கரும் பிறவிக் கடலிடை நீந்திப்

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர் மறந்தும் மழைமறா மகதநன் னாட்டுக்

கொருபெருந் திலகமென் றுரவோ ருரைக்குங் கரவரும் பெருமைக் கபிலையம் பதியில்