பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

அளப்பரும் பாரமிதை அளவின்றி நிறைத்துத் துளக்கமில் புத்த ஞாயிறு தோன்றிப்

போதி மூலம் பொருந்திவந் தருளி

அண்ணல் அறக்கதிர் விரிக்குங் காலைப் பைந்தொடி தந்தை யுடனே பகவன் இந்திர விகாரம் ஏழும்ஏத் துதலிற்

றுன்பக் கதியில் தோற்றர வின்றி

193

அன்புறு மனத்தோடு அவனறங் கேட்டுத் துறவி யுள்ளந் தோன்றித் தொடரும் பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்

(வஞ்சிமாநகர் புக்க காதை 40–59)

இதிலே, கோவலனும் கண்ணகியாரும் மீண்டும் மீண்டும் பல பிறப்புகள் பிறந்து வாழ்வார்கள் என்றும், கடைசியில்புத்தருடைய உபதேசங்களை நேரில் அவர் வாய்மொழியாகக் கேட்டுத் தெளிந்து வீடுபேறடைவார்கள் என்றும் கூலவாணிகன் சாத்தனார் ஐயமில்லாமல் தெளிவாகக் கூறுகிறார்.

கபிலவாஸ்து நகரத்திலே கௌதமர் புத்தர் பிறந்து போதி ஞானம் பெற்று உலகத்தில் உபதேசம் செய்து மறைந்துபோய் இற்றைக்கு 2500 ஆண்டுக்கு மேலாய்விட்டது. அப்படியிருக்க, கோவலனும் கண்ணகி யும் மாசாத்துவானும் புத்தருடைய உபதேசத்தை இனிமேல் கேட்கப் போவதாக மணிமேகலைக் காவியத்தில் கூலவாணிகன் சாத்தனார் கூறுகிறார். இவருக்குச் சரித்திரம் தெரிந்திருந்தால், கௌதம புத்தரின் வரலாற்றை அறிந்திருந்தால், இவ்வாறு முன்னுக்குப்பின் முரண்படக் கூற மாட்டார். ஆகவே இது சரித்திரத்துக்கு மாறுபட்ட கட்டுக்கதை, பொய்க் கதை என்று திரு. பிள்ளையும் திரு. சாஸ்திரியும் கூறுகிறார்கள். இப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் கூறுவது உண்மைபோலத் தோன்று கிறது. ஐயமில்லாமல், முழு உண்மைபோலக் காணப்படுகிறது. ஏற்றுக் கொள்ளவேண்டிய, மறுக்கமுடியாத உண்மை போலத் தெரிகிறது.

"

ஆனால், பௌத்தராக வாழ்ந்து பௌத்தமதத் தத்துவங்களை நுட்பமாக ஆராய்ந்து அறிந்த கூலவாணிகன் சாத்தனார் - பௌத்த மதப் பிரசாரத்துக்காகவே மணிமேகலைக் காவியத்தை இயற்றிய சாத்தனார் தமது காலத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே கௌதம