பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

புத்தர் வாழ்ந்து மறைந்துவிட்டார் என்னும் சாதாரண உண்மை யையும் அறியாதவரா? அவர் கௌதம புத்தரின் வரலாற்றினை அறியாதவரா? புத்தர் பெருமான் இனிப் பிறந்து உபதேசம் செய்யும் போது கோவலனும் கண்ணகியும் மாசாத்துவானும் அவ்வற நெறியைக் கேட்டறிந்து வீடுபேறடைவார்கள் என்று சாத்தனார் கூறியதன் கருத்து என்ன?

இதைக் கருதும்போதுதான் எங்கேயோ ஏதோ தவறு இருக்கிறது என்பது புலனாகிறது. இங்குத்தான் ஆராய்ச்சியாளர்கள் பகுத்தறிவைச் சரியாகச் செலுத்திக், காய்தல், உவத்தல் இன்றி நடுநிலையில் நின்று ஆராய வேண்டியிருக்கிறது.

66

'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு'

என்றும்

“எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்றும் அறிவுடைமைக்கும் மெய்யுணர்தலுக்கும் திருவள்ளுவர் விளக்கங் காட்டுகிறார். அவ்வழியில் நின்று இதன் உண்மையை ஆராய்வோம்.

பிள்ளையவர்களும் சாஸ்திரியவர்களும் கூறுவது உண்மை தான், சாத்தனார் வரலாற்றுக்கு முரண்பட்ட செய்தியைத்தான் கூறி யுள்ளார் என்று எல்லோரும் கருதுவார்கள்; ஆனால், ஆழ்ந்து நோக்கு வோருக்குச் சாத்தனார் கூறியதில் முரண்பாடு தோன்றாது. இதன் உண்மையைக் கண்டறிய தமிழ் அறிவும் சரித்திர அறிவும் மட்டும் இருந்தாற் போதாது. சாத்தனார் இவ்விடத்தில்கூறுவது பௌத்தமத சம்பந்தமான ஒரு செய்தி. ஆகவே, பௌத்தமத ஆராய்ச்சியுடையவர் களுக்குத்தான் இவர் கூறியதன் பொருள்- உண்மையான மெய்ப் பொருள் நன்கு விளங்கும். ஏனையோருக்கு விளங்கவே விளங்காது. திரு. பிள்ளையும் திரு. சாஸ்திரியும் பௌத்த சமய சம்பிரதாயத்தை யறியாமல், இப்பகுதியை ஆராய்ந்தபடியால் பிழையான முடிவைக் கண்டார்கள். பௌத்த சம்பிரதாயம் அறியாதவர்களுக்கு இவர்கள் ஆராய்ச்சி முழு உண்மை போலத்தான் தோன்றும். ஆனால் உண்மை அதுவன்று, அப்படியானால் உண்மை எது?