பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

197

சாஸ்திரியாரின் ஆராய்ச்சி முடிவும் பகற்கனவாய்ப் பலனில்லாமற் போயிற்று. "மணிமேகலை ஆசிரியரும் சிலப்பதிகார ஆசிரியரும் காவியத் தலைவர்களாகிய கோவலனும் கண்ணகியும் சேரன் செங்குட் டுவனும் சரித்திர புருஷர்கள் என்றும், இவர்கள் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்றும் கனவுகூடக் காண முடியுமா?” என்று நீலகண்ட சாஸ்திரியார் பௌத்தமத சம்பிரதாயத்தை அறியாமல் ஆராய்ந்து முடிவு கூறியது பொருளற்ற வீண்கேள்வியாய் விட்டது. சாத்தனாரும் இளங்கோவடிகளும் கோவலனும் கண்ணகியும் சேரன் செங்குட்டுவனும் சரித்திர புருஷர்கள்தாம், உலகத்தில் உயிர் வாழ்ந்திருந்தவர்கள் தாம் என்னும் உண்மை ஐயத்துக்கிடமில்லாமல் தெளிவாய்த் தெரிகிறது.

வையாபுரிப் பிள்ளையும் நீலகண்ட சாஸ்திரியாரும் பல்கலைக் கழகப் பேராசிரியர்களாக இருந்தும், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் நாட்டுச் சரித்திர வரலாறுகளைப் பொறுத்தவரையில், இதுபோன்ற தவறான ஆராய்ச்சிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றையும் பின்னர் விளக்கிக் கூறுவோம்.

குறிப்பு: (தமிழ்ப் பொழில் துணர் 35, மலர் 3-ல், “மணிமேகலையில் முரண்பட்ட செய்தியா?” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் ஒன்று விடுபட்டுப்போயிற்று. அதனை இங்கு எழுதுகிறேன்.)

  • இனி வரப்போகிற புத்தரிடம் கோவலனும் கண்ணகியும் உபதேசம் கேட்டு வீடு பேறடையப் போகிறார்கள் என்று சாத்தனார் மணிமேகலையில் கூறியதை எடுத்துக் காட்டினேன். அக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட மணிமேகலைச் செய்யுளில்,

66

“காதலி தன்னொடு கபிலையம் பதியில்

66

நாதன் நல்லறம் கேட்டுவீ டெய்தும்”

என்றும்,

"கரவரும் பெருமைக் கபிலையம் பதியில்

அன்புறு மனத்தோடு அவனறங் கேட்டுத் துறவி யுள்ளந் தோன்றித் தொடரும் பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்

தமிழ்ப் பொழில், துணர் 35. மலர் 4, 1959.