பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

மேல் நடந்த திருவடியுடையவன் என்பது சைவ சமயத்தவரின் கொள்கையாக இருந்திருந்தால். சிவனது திருவடிகளைப் புகழ்வதற் கென்றே முற்பட்ட அப்பர் சுவாமிகள் அக்கொள்கைக்கு முதன்மை கொடுத்து வற்புறுத்திக் கூறியிருப்பாரன்றோ? அவ்வாறு அவர் கூறாது விட்ட காரணம், இக்கொள்கை சைவசமயக் கொள்கை ....... ...றென்பதே.

சிவபெருமான் பூமேல் நடந்த திருவடி யுடையவன் என்பது சைவ சமயக் கொள்கையாக இருந்தால், இக்கொள்கை மூவர் தேவாரங் களிலும் ஏனைய சைவ நூல்களிலும் கூறப்பட்டிருக்குமன்றோ? மாறாக, ஜைன சமய நூல்களில் இக்கொள்கை பெரிதும் அழுத்தந்திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, மலர்மிசை ஏகினான் என்பது ஜைனக் கடவுளைக் குறிக்கிறது என்பதில் யாதேனும் ஐயம் உளதோ?