பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 6

சிவன், முருகன், பிரமன் முதலிய கடவுளரும் அறவாழி அந்தணர், அதாவது, தருமச் சக்கரத்தையுடையவர் என்று நூல்களில் யாண்டும் கூறப்பட்டனர் இலர். ஆகவே, அவர்களும் தருமச் சக்கரத்தையுடையவர் ஆகார். ஆனால், ஜைனரின் அருகக் கடவுள் அறவாழியை (தருமச் சக்கரத்தை) உடையவர் என்று நூல்கள் கூறுகின்றன. அவற்றில் சிலவற்றை ஈண்டுக் காட்டுவாம்:

66

'ஆதியங் கடவுள் அறவாழி அந்தணன்

அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன்

என்பது திவாகரம்.

66

'அருகன் எண்குணன் நிச்சிந்தன் அறவாழி வேந்தன் வாமன் என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது.

66

66

'அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்” என்று பிங்கல நிகண்டு பேசுகிறது.

"மறங்கொள் நேமி விட்டெறிந்து

மன்னர் சென்னி சோரியில்

பிறங்க வென்ற வென்றியோர் அனேக பேர்; உலகெல்லாம்

இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்

அறங்கொள் நேமிகொண்டு வென்ற

சோதி எங்கள் ஆதியே.

(திருக்கலம்பகம், 25)

“மகர வாருதி வலயத்துலக மேழும்

وو

66

வந்திறைஞ்ச அருளாழி வலங்கொண்டேத்தும் சிகரமா மணிநீல மன்ன வெற்பைத் தேராதார் தாந்தம்மைத் தேராதாரே.’

(திருக்கலம்பகம், 31)

'ஆரருள் பயந்தனை ஆழ்துயர் அவித்தனை

ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை சீரருள் மொழிய நின் திருவடி தொழுதனம்

(சூளாமணி, இரதநூபுரம், 98)

அறவாழியையுடைய அருகக் கடவுளைச் சீவகச்சாமி தலையுற வணங்கின செய்தியைச் சீவகசிந்தாமணி கூறும் செய்யுள் இது: