பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

66

'நிலவிலகி உயிரோம்பி நிமிர்ந்தொளிர்ந்து பசிபகை நோய் உலகமிருள் கெடவிழிக்கும் ஒண்மணி அறவாழி அலகையிலாக் குணக்கடலை அகன்ஞான வரம்பனை விலையிலா மணிமுடியான் விண்வியப்ப விறைஞ்சினான்

(முத்தியிலம்பகம், 425)

211

மற்றும், தண்மதிபோல் நேமி, மலமறு திகிரி அறவாழி வேந்தன் என்று சீவக சிந்தாமணியில் அருகக் கடவுளின் அறவாழி கூறப்படுகிறது. மேலும், “அரு சக்கரம் ஏந்திய சங்கரன்” என்றும், பொருளாக என்னை ஆண்டு கொண்டாய் அறவாழி கொண்டே வென்ற அந்தணனே” என்றும் திருநூற்றந்தாதி முழங்குகின்றது.

“அந்தரத் துருளும்நின் அலர்கதிர் அறவாழி இந்திரனும் பணிந்தேத்த இருவிசும்பில் திகழ்ந்தன்றோ” என்பதும்,

“மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூழ

அறவாழி வலனுயரி யருள்நெறியே யருளியோய்'

என்பதும் யாப்பருங்கல விருத்தி மேற்கோள் செய்யுள்கள்.

இதுகாறும், ஜைனசமய நூல்களிலிருந்து காட்டிய மேற்கோள்களைக் கொண்டு, அருகக் கடவுள் அறவாழி யுடையவர் என்பதை அறிந்தாம். அறவாழி, இன்றும் ஜைனக் கோயில்களில் வழிபடப்பட்டு வருகின்றது.

கலச்

பேரரசராக விளங்கும் சக்கரவர்த்திகளின் படைக் சாலையில் ஆழிப்படை (சக்கர ரத்தினம்) தோன்றும் என்பதும், அச்சக்கரத்தைப் பின்தொடர்ந்து சக்கரவர்த்தி சேனையுடன் சென்றால் அது பணியாத மன்னர்களை யெல்லாம் பணியச் செய்து திரும்பும் என்பதும், அடங்காத மன்னர் யாரேனும் இருந்தால் அவர்களைப் பணியச்செய்ததற்கே அச்சக்கரம் ஆயுதசாலைக்குத் திரும்பும் என்பதும், சக்கரப் படையைப் பெற்ற சக்கரவர்த்திகள் சக்கரச் செல்வர் எனப்படுவர் என்பதும் ஜைனசமயக் கொள்கை. இதுபோன்றே, அருகக் கடவுளுக்கு அறவாழி உண்டென்பதும், அவருக்கு முன் புறத்தில் அறவாழி எப்போதும் இருக்கும் என்பதும், அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவ்வறவாழி அவரை முன்னிட்டுச் செல்லும் என்பதும் ஜைன சமயக் கொள்கையாகும். இம்மரபை மனத்துட்