பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -6

கொண்டு, அருகப்பெருமானை விளித்து ஓர் ஐயவினா நிகழ்த்தும் நகைச்சுவையுடைய செய்யுள் சூளாமணி என்னும் காவியத்துள் காணப்படுகிறது. அச் செய்யுள் பின்னே வருகிறது. அதனைப் படித்துப் பொருள் உணர்ந்து சுவையை நுகர்க.

66

"தெருளாமை யால்வினவற் பாலதொன் றுண்டு

திருவடிகள் செம்பொனார் அரவிந்தம் ஏந்த இருளாழி ஏழுலகும் சூழொளியின் மூழ்க இமையாத செங்கண்ணின் இமையோர் வந்தேத் உருளாழியானும் ஒளிமணி முடிமேற் கைவைத்(து) ஒருபாலின் வர, உலகம் நின்னுழைய தாக, அருளாழி முன்செல்லப் பின்செல்வ தென்னோ அடிப்படா தாய்நின்ற அகன்ஞாலம் உண்டோ?”

(துறவுச் சருக்கம்,...............................)