பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6

"நாடு மூரும் நனிபுகழ்ந் தேத்தலும் பீடுறும்மழை பெய்கெனப் பெய்தலும் கூட லாற்றவர் நல்லதுகூறுங்காற் பாடு சான்மிகு பத்தினிக் காவதே

என்பது வளையாபதிச் செய்யுள்.

6

கற்புடைப் பெண்கள் இருக்கும் நாட்டில் மழை தவறாமல் பெய்து நாடு வளம்படும் என்றும், அரசனுடைய ஆட்சியும் செங்கோலாக நடைபெறும் என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது:

66

'வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது

நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது

பத்தினிப் பெண்டிர் இருந்தநாடு.

99

(சிலம்பு., 15: 14)

இதுபோன்றே அரசனுடைய செங்கோலினாலேதான் மகளிர் கற்பு நிலைபெறுகிறது என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது:

66

'அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது

பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப் பண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை.’

(சிலம்பு. 28:207-9)

தவசிகள் தவம் செய்யாவிட்டால் மழை பெய்யாது என்று

நான்மணிக் கடிகை என்னும் நூல் கூறுகிறது:

"மழையின்றி மாநிலத்தார்க் கில்லை, மழையும்

தவமிலார் இல்வழி இல்லைத், தவமும்

அரசிலார் இல்வழி யில்லை, யரசனும்

இல்வாழ்வான் இல்வழி இல்.

(நான்மணிக் கடிகை, 48)

இவையன்றி, பார்ப்பனர் அழல் ஓம்புதலினாலேயும் மழை பெய்கிறது என்னும் கருத்தும் பண்டைக் காலத்தில் இருந்தது. இதனை, "மழைவளந் தரூஉம் அழலோம் ..பாளன்” என்னும் மணிமேகலை யினால் அறியலாம்.