பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 6.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழகம் - கால ஆராய்ச்சி, இலக்கிய ஆராய்ச்சி

217

இவர்களாலேதான் பண்டைக் காலத்தில் மாதம் மும்மாரி பெய்தது என்று பிற்காலத்து நூலாகிய விவேக சிந்தாமணி கூறுகிறது:

"வேத மோதிய வேதியர்க் கோர்மழை நீதி மன்னர் நெறியினுக் கோர்மழை காதல் மங்கையர் கற்பினுக் கோர்மழை

மாத மூன்று மழையெனப் பெய்யுமே

என்பது அது மாதம் மும்மாரி பெய்தது எந்தக் காலத்தில் என்பது தெரியவில்லை. ஆனால், வேதியரும் மன்னரும் மங்கையரும் தத்தம் அறநெறியிலிருந்து தவறியபடியால், ஆண்டில் மூன்று மழை பெய்தது என்று அந்நூலே கூறுகின்றது.

“அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர்மழை வரிசை தப்பிய மன்னருக் கோர்மழை

புருடனைக் கொன்ற பூவையர்க் கோர்மழை வருடம் மூன்று மழையெனப் பெய்யுமே

என்பது அது.

“என்ன ஐயா! இந்த விஞ்ஞான காலத்தில் அணுக்குண்டு யுகத்தில் பழைய புராணங்களைப் புரட்டுகிறீர்" என்று வாசகர் கருதுவர் என்று தோன்றுகிறது. எப்படியெல்லாம் மழையைப் பற்றிப் பண்டைக் காலத்தவர் கருதிவந்தனர் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றி மக்கள் எவ்வாறு கருதினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா?

சத்தியத்தைக் கண்டுபிடிக்கக் கொதிக்கும் எண்ணெயில் கை விடுதல், பாம்புக் குடத்தில் கைவிடுதல்போன்ற செயல்களும் அக் காலத்தில் இருந்தனவே!